Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக் * என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக் * என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக் * என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

இந்தியாவில் நடக்குமா ஒலிம்பிக் * என்ன சொல்கிறார் ஐ.ஒ.சி., புதிய தலைவர்

ADDED : மார் 21, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ''ஒலிம்பிக் நடத்தும் நாட்டினை தேர்வு செய்வது குறித்து சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் இதை பகிர்ந்து கொள்கிறேன்,'' என ஐ.ஒ.சி., புதிய தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் சங்க (ஐ.ஒ.சி.,) தலைவர் தாமஸ் பாக். இவரது 12 ஆண்டு பதவிக்காலம் ஜூன் 23ல் முடிகிறது. கிரீசில் நடந்த சிறப்பு கூட்டத்தில் புதிய தலைவருக்கான தேர்தல் நடந்தது. 7 பேர் போட்டியிட 97 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

முடிவில் 49 வாக்குகள் பெற்ற ஜிம்பாப்வே விளையாட்டுத்துறை அமைச்சர், ஒலிம்பிக் நீச்சலில் இரு முறை தங்கம் வென்ற முன்னாள் வீராங்கனை கிறிஸ்டி கவன்ட்ரி 41, ஐ.ஒ.சி., யின் 10வது தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய தலைவர் தாமஸ் பாக்கின் ஆதரவாளரான இவர், அடுத்த 8 ஆண்டு தொடர்ந்து பதவியில் இருப்பார்.

ஒலிம்பிக் தினமான ஜூன் 23ல் பொறுப்பேற்க உள்ள கிறிஸ்டி கவன்ட்ரி, 131 ஆண்டு ஐ.ஒ.சி., வரலாற்றில் முதல் பெண் தலைவர், முதல் ஆப்ரிக்கர் என பெருமை பெற்றார்.

இதனிடையே 2036ல் ஒலிம்பிக் போட்டி நடத்த இந்தியா முயற்சித்து வருவது குறித்து கிறிஸ்டி கவன்ட்ரி கூறியது:

தாமஸ் பாக் பதவி காலம் முடிவதற்கு முன், ஒலிம்பிக் நடத்தும் நாடு குறித்த பேச்சுவார்த்தை விரைவுபடுத்தப்படும். இதற்கென உள்ள செயல்முறைகள், தற்போது நடந்து வருகின்றன. அடுத்த சில மாதங்களுக்கு இது தொடரும். இதில் அனைத்து உறுப்பினர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என நினைக்கிறேன். எனக்கும் சில யோசனைகள் உள்ளன. அடுத்த வாரம் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

ஜெய் ஷா வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர், இந்தியாவின் ஜெய் ஷா கூறுகையில்,'' ஐ.ஒ.சி., புதிய தலைவர் கிறிஸ்டி கவன்ட்ரிக்கு வாழ்த்துகள். இதற்கு முழுவதும் தகுதியானவர் நீங்கள். லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் அதற்கு அடுத்தும் கிரிக்கெட்டை கொண்டு சேர்ப்பதில் உங்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us