Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு 5 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

இந்தியாவுக்கு 5 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

இந்தியாவுக்கு 5 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

இந்தியாவுக்கு 5 பதக்கம்: குளிர்கால ஸ்பெஷல் ஒலிம்பிக்கில்

ADDED : மார் 13, 2025 08:01 PM


Google News
Latest Tamil News
டுரின்: ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி உட்பட 5 பதக்கம் கிடைத்தது.

இத்தாலியில், அறிவுசார் குறைபாடுள்ள வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஸ்பெஷல் ஒலிம்பிக் உலக குளிர்கால விளையாட்டு 12வது சீசன் நடக்கிறது. இதன் 'ஸ்னோபோர்டிங்' விளையாட்டுக்கான 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்--எப்25' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை பாரதி, தங்கம் வென்றார். இது, இத்தொடரில் பாரதி கைப்பற்றிய 2வது தங்கம். ஏற்கனவே இவர், 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்--எப்14' பிரிவில் தங்கம் வென்றிருந்தார். இப்பிரிவில் இந்திய வீரர் ஹேம் சந்த், 6வது இடம் பிடித்தார்.

'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்--எப்26' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஹர்ஷிதா தாகூர் வெண்கலம் கைப்பற்றினார். இது, இம்முறை இவர் வென்ற 2வது பதக்கம். ஏற்கனவே இவர், 'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்--எப்16' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.

'நோவைஸ் ஜெயன்ட் ஸ்லாலோம்--எப்24' பிரிவு பைனலில் இந்திய வீரர் சமீர் யாதவ், 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார்.

நிர்மலா 'தங்கம்': 'ஆல்பைன் ஸ்கீயிங்-எப்6' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை நிர்மலா தேவி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 'ஆல்பைன் ஸ்கீயிங்-எப்1' பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ராதா தேவி வெள்ளி வென்றார்.

இத்தொடரில் இந்தியாவுக்கு 4 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என 9 பதக்கம் கிடைத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us