/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: அராய்ஜீத் கேப்டன் * இந்திய 'ஜூனியர்' அணிக்குஹாக்கி: அராய்ஜீத் கேப்டன் * இந்திய 'ஜூனியர்' அணிக்கு
ஹாக்கி: அராய்ஜீத் கேப்டன் * இந்திய 'ஜூனியர்' அணிக்கு
ஹாக்கி: அராய்ஜீத் கேப்டன் * இந்திய 'ஜூனியர்' அணிக்கு
ஹாக்கி: அராய்ஜீத் கேப்டன் * இந்திய 'ஜூனியர்' அணிக்கு
ADDED : ஜூன் 10, 2025 09:42 PM

புதுடில்லி: நான்கு நாடுகள் தொடரில் பங்கேற்கும் இந்திய 'ஜூனியர்' ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை, ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடர், சென்னை, மதுரையில் நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, ஜெர்மனியில் நடக்கவுள்ள நான்கு நாடுகள் தொடரில் (ஜூன் 21-25) பங்கேற்க உள்ளது. ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளும் இதில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். பட்டியலில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.
இதற்காக 24 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அராய்ஜீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2023 ஜூனியர் ஆசிய கோப்பை, 2023-24 புரோ லீக் தொடரில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர் அராய்ஜீத். ஆமிர் அலி துணைக் கேப்டனாக செயல்பட உள்ளார். பிக்ரம்ஜித் சிங், விவேக் லக்ரா கோல் கீப்பர்களாக உள்ளனர். தவிர, ரவ்னீத் சிங், சுக்விந்தர் சிங், ஜீத்பால், குர்ஜோத் சிங், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர். இருமுறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 'சீனியர்', முன்னாள் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் பயிற்சியாளராக உள்ளார்.