ADDED : மே 25, 2025 10:28 PM

ரொசாரியோ: ஜூனியர் ஹாக்கி லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 2-1 என, சிலியை வென்றது.
அர்ஜென்டினாவில், நான்கு நாடுகள் பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, அர்ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் விளையாடுகின்றன.
லீக் போட்டியில் இந்தியா, சிலி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு சுக்வீர் கவுர் (39வது நிமிடம்), கனிகா சிவாச் (58வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். சிலி சார்பில் ஜவேரியா (20வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணி, தனது 2வது லீக் போட்டியில் உருகுவே அணியை எதிர்கொள்கிறது.