/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நியூசிலாந்தை வீழ்த்தியதுஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நியூசிலாந்தை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நியூசிலாந்தை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நியூசிலாந்தை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * நியூசிலாந்தை வீழ்த்தியது
ADDED : ஜூலை 27, 2024 11:15 PM

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி முதல் போட்டியில் இந்திய அணி, கடைசி நிமிடத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கியில் 12 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் நியூசிலாந்து, அர்ஜென்டினா, அயர்லாந்து, நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
முதல் கோல்
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் நியூசிலாந்து அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில் சாம் லேன் கோல் அடிக்க, இந்தியா 0-1 என பின்தங்கியது. போட்டியின் 24வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் மன்தீப் சிங் கோல் அடிக்க, முதல் பாதி ஸ்கோர் 1-1 என சமன் ஆனது.
விவேக் அபாரம்
இரண்டாவது பாதியில் 34வது நிமிடம் இந்திய இளம் வீரர் விவேக் சாகர் பிரசாத் அடித்த பந்து, நியூசிலாந்து கோல் போஸ்ட் 'லைனை' லேசாக கடக்க, அம்பயர் கோல் என அறிவித்தார். நியூசிலாந்து தரப்பில் அப்பீல் செய்யப்பட்ட போதும், 'ரீப்ளேயில்' கோல் உறுதியானது. இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.
போட்டியின் 53வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் நியூசிலாந்து வீரர் சைமன் சைல்டு ஒரு கோல் அடித்தார். போட்டி முடிய 2 நிமிடம் இருந்த போது, இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதில் கோல் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், நியூசிலாந்து வீரர் கையில் பந்து பட, இந்தியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பு கிடைத்தது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், கோலாக மாற்றினார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.