/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வென்றார் காஸ்பரோவ் * ஆனந்த் 2வது இடம்வென்றார் காஸ்பரோவ் * ஆனந்த் 2வது இடம்
வென்றார் காஸ்பரோவ் * ஆனந்த் 2வது இடம்
வென்றார் காஸ்பரோவ் * ஆனந்த் 2வது இடம்
வென்றார் காஸ்பரோவ் * ஆனந்த் 2வது இடம்
ADDED : அக் 11, 2025 10:51 PM

செயின்ட் லுாயிஸ்: 'கிளட்ச்' செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பரோவ்.
அமெரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன்கள் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 55, ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் 62, மோதிய 'கிளச்' செஸ் தொடர் நடந்தது.
கடந்த 1995 உலக சாம்பியன்ஷிப்பிற்குப் பின், இருவரும் மோதினர். மொத்தம் 3 நாளில் 12 போட்டிகள் நடந்தன. முதல் இரு நாள் (1.5-2.5, 2.0-6.0) முடிவில் 3.5-8.5 என ஆனந்த் பின்தங்கினார்.
கடைசி, 3வது நாளில் 4 போட்டி நடந்தன. இதில் 3ல் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில், முதல் போட்டியை 'டிரா' செய்த ஆனந்த், அடுத்த போட்டியில் தோல்வியடைந்தார்.
கடைசி இரு போட்டியில் ஆனந்த் வெற்றி பெற்றார். எனினும், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் ஆனந்த் 11.0-13.0 என பின்தங்கினார். 30 ஆண்டுக்குப் பின் இருவரும் மோதிய இத்தொடரில், ஆனந்துக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
காஸ்பரோவ் சாம்பியன் ஆனார். இவருக்கு ரூ. 69 லட்சம் பரிசு கிடைத்தது. ஆனந்த் ரூ. 59 லட்சம் பரிசு பெற்றார்.


