/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்
ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்
ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்
ஒட்டகப் பந்தயம் அறிமுகம்: ஆசிய யூத் விளையாட்டில்
ADDED : மே 15, 2025 09:28 PM

மனாமா: பஹ்ரைனில் நடக்கவுள்ள ஆசிய யூத் விளையாட்டில் ஒட்டகப் பந்தயம் அறிமுகமாகிறது.
பஹ்ரைன் தலைநகர் மனாமாவில், வரும் அக். 22-31ல், ஆசிய யூத் விளையாட்டு 3வது சீசன் நடக்கவுள்ளது. இதில் தடகளம், பாட்மின்டன், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதுாக்குதல் உள்ளிட்ட 24 வகையான விளையாட்டுகள், 207 பிரிவுகளில் நடக்க உள்ளன.
பாரம்பரிய பாலைவன விளையாட்டான ஒட்டகப் பந்தயம், முதன்முறையாக நடத்தப்படுகிறது. இப்போட்டி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான 500 மீ., ஓட்டமாக நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பஹ்ரைன் உட்பட 8 நாடுகள் பங்கேற்கின்றன.
ஒட்டகப் பந்தயம் தவிர, இம்முறை குத்துச்சண்டை, சைக்கிள் பந்தயம், குதிரையேற்றம், புட்சால், டிரையத்லான், வாலிபால், மல்யுத்தப் போட்டிகளும் அறிமுகமாகின்றன.