/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினாகுத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா
குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா
குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா
குத்துச்சண்டை: காலிறுதியில் லவ்லினா
ADDED : ஜூலை 31, 2024 11:24 PM

பாரிஸ்: ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிக்கு இந்திய வீராங்கனை லவ்லினா முன்னேறினார்.
பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லவ்லினா, நார்வேயின் சன்னிவா ஹாப்ஸ்டாட் மோதினர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் (69 கிலோ) கைப்பற்றிய லவ்லினா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நுழைந்தார். வரும் ஆக. 4ல் நடக்கவுள்ள காலிறுதியில் லவ்லினா, ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் (2016ல் வெண்கலம், 2020ல் வெள்ளி) வென்ற சீனாவின் லி கியானை எதிர்கொள்கிறார். இதில் லவ்லினா வெற்றி பெறும் பட்சத்தில் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்யலாம்.
* பெண்களுக்கான 64 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் பிரீத்தி பன்வார், கொலம்பியாவின் யேனி அரியாஸ் மோதினர். இதில் பிரீத்தி 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.