Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம் * இரண்டாவது தங்கம் வென்றார் குல்வீர் சிங்

ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம் * இரண்டாவது தங்கம் வென்றார் குல்வீர் சிங்

ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம் * இரண்டாவது தங்கம் வென்றார் குல்வீர் சிங்

ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம் * இரண்டாவது தங்கம் வென்றார் குல்வீர் சிங்

Latest Tamil News
குமி: ஆசிய தடகளத்தில் இந்தியா பதக்கமழை பொழிகிறது. குல்வீர் சிங் இரண்டாவது தங்கம் கைப்பற்றினார்.

தென் கொரியாவில் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இந்தியா சார்பில் 58 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் 18 வயது பூஜா பங்கேற்றார். 2023ல் நடந்த 23 ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இவர், நேற்று அதிகபட்சம் 1.89 மீ., உயரம் தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இது இவரது சிறந்த செயல்பாடாக அமைந்தது.

குல்வீர் அபாரம்

ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியாவின் குல்வீர் சிங், 13:24.77 நிமிடத்தில் வந்து தங்கப்பதக்கம் வென்றார். இது ஆசிய சாம்பியன்ஷிப் சாதனை ஆனது. முன்னதாக 2015ல் கத்தார் போட்டியில் முகமது அல் கார்னி (கத்தார்), 13:34.47 நிமிடத்தில் வந்து இருந்தார்.

தவிர குல்வீர் வென்ற இரண்டாவது தங்கம் இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் சாதித்து இருந்தார். தமிழகத்தின் லட்சுமணனுக்கு (2017ல்) அடுத்து, ஒரே தொடரில் 5000, 10,000 மீ., ஓட்டத்தில், தங்கம் வென்ற வீரர் ஆனார் குல்வீர் சிங்.

* கோபால் சைனி (1981), பஹதுர் பிரசாத் (1993), லட்சமணனுக்கு (2017) அடுத்து 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற வீரர் ஆனார் குல்வீர் சிங்.

நந்தினி கலக்கல்

பெண்களுக்கான 7 போட்டி கொண்ட 'ஹெப்டத்லான்' நடந்தது. 6 போட்டி முடிவில் சீனாவின் லியு ஜிங்யி (5110), இந்தியாவின் நந்தினி (5056) முதல் இரு இடத்தில் இருந்தனர். கடைசியாக 800 மீ., ஓட்டம் நடந்தது. இதில் லியுவை விட 4 வினாடி முந்தி வந்தால், முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றலாம் என்ற நிலையில் நந்தினி (2:15.54) முதலிடம் பெற்றார். லியு (2:24.05) 3வது இடம் பிடித்தார்.

இதையடுத்து 5941 புள்ளியுடன் நந்தினி தங்கம் கைப்பற்றினார். லியுவுக்கு (5869) வெள்ளி கிடைத்தது.

பாருல் 'வெள்ளி'

பெண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது. இந்தியாவின் பாருல் சவுத்ரி (9:12.46 நிமிடம்) இரண்டாவது இடம் பெற்று வெள்ளி கைப்பற்றினார். அன்கிதா (9:41.54) 5வது இடம் பிடித்தார்.

நேற்று இந்தியா 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கம் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது.

தகுதி நீக்கம்

ஆண்களுக்கான 4X100 மீ., தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் பிரனவ், ராகுல் குமார், மணிகண்டா, அம்லன் இடம் பெற்ற அணி, 2வது இடம் பிடித்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தாண்டி பிரனவ்-ராகுல் 'பேடனை' மாற்றியது தெரியவர, இந்தியா தகுதிநீக்கம் செய்யப்பட்டது.

பைனலில் வித்யா, நித்யா

இன்று கடைசி நாளில் 11 பிரிவுகளில் பைனல் நடக்க உள்ளன. இதில் ஜோதி, தமிழகத்தின் நித்யா (200 மீ.,), அனிமேஷ் (200 மீ.,), தமிழகத்தின் வித்யா, அனு (400 மீ., தடை ஓட்டம்), பாருல் சவுத்ரி, சஞ்ஜிவனி (5000 மீ.,), பூஜா, டுவிங்கிள், அனு குமார், கிரிஷன் (800 மீ.,) உட்பட 8 பிரிவில் இந்தியா நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

18 பதக்கம்

ஆசிய தடகளத்தில் இந்தியா (8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம்) இதுவரை 18 பதக்கம் வென்று, பட்டியலில் 2வது இடத்தில் தொடர்கிறது. முதலிடத்தில் சீனா (15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்), 3வது இடத்தில் ஜப்பான் (4 தங்கம், 10 வெள்ளி, 10 வெண்கலம்) உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us