Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஆசிய ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஆசிய ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ஆசிய ஸ்குவாஷ்: காலிறுதியில் வேலவன்

ADDED : ஜூன் 18, 2025 10:59 PM


Google News
Latest Tamil News
குச்சிங்: மலேசியாவில் ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியா சார்பில் வேலவன் செந்தில்குமார் பங்கேற்கிறார். கடந்த முறை வெள்ளி வென்ற இவர், இம்முறை இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற வீரராக களமிறங்குகிறார். 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஜப்பானின் டொமோட்டகா எண்டோவை சந்தித்தார்.

இதில் வேலவன் 11-3, 11-1, 11-4 என்ற கணக்கில் (3-0) எளிதாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இதில் மலேசியாவின் ஜோசிம் சுவாவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சுராஜ் சந்த், 1-3 என (11-5, 3-11, 4-11, 3-11) என மலேசியாவின் அமீசன்ராஜிடம் வீழ்ந்தார். பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஆகான்ஷா, இரண்டாவது சுற்றில் மலேசியாவின் ஒயிட்னியிடம் 0-3 என தோல்வியடைந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us