ADDED : மே 26, 2025 09:56 PM

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானில் 21வது சீனியர் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்களுக்கான 55 கிலோ குமிட்டே பிரிவில் இந்தியாவின் அலிசா வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 68 கிலோ குமிட்டே பிரிவில் இந்திய வீராங்கனை புவனேஷ்வரி, வெண்கலம் பதக்கம் வென்றார்.
ஆசிய பாரா கராத்தே போட்டியில் பார்வையற்றோருக்கான பிரிவில் இந்தியாவின் தருண் சர்மா, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். இத்தொடரில் இந்தியா ஒரு தங்கம், 2 வெண்கலம் என 3 பதக்கம் கைப்பற்றியது.