ADDED : மே 05, 2026 11:20 PM

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை தகுதிச்சுற்றில் இந்திய ஆண்கள் அணி மூன்றாடவது இடம் பிடித்தது.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ் 2' நேற்று துவங்கியது. முதலில் காம்பவுண்டு பிரிவில் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. 2023ல் உலக சாம்பியன் ஆன இந்தியாவின் ஓஜாஸ் தியோடேல், 711 புள்ளியுடன் 7 வது இடம் பிடித்தார். சாஹில் ராஜேஷ், (711) 8வது இடம் பெற, மற்றொரு இந்திய வீரர் குஷால் தலால் (708) 18வது இடம் பெற்றார்.
ஒட்டுமொத்தமாக இந்திய ஆண்கள் அணி, 2130 புள்ளியுடன் 3வது இடம் பிடித்தது.
காம்பவுண்டு பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஆதித்தி 700 புள்ளியுடன் 13வது இடம் பெற்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் பிரகதி (697) 19, ஜோதி (695) 21வது இடம் பெற்றார். ஒட்டுமொத்தமாக இந்திய பெண்கள் அணிக்கு (2092) 5வது இடம் கிடைத்தது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஓஜாஸ், ஆதித்தி ஜோடி, 1411 புள்ளியுடன் 5வது இடம் பெற்றது.
