Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: இந்தியா தோல்வி

வில்வித்தை: இந்தியா தோல்வி

வில்வித்தை: இந்தியா தோல்வி

வில்வித்தை: இந்தியா தோல்வி

UPDATED : ஜூன் 15, 2024 12:03 AMADDED : ஜூன் 15, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
ஆன்டலியா: ஒலிம்பிக் வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி, உக்ரைனிடம் தோல்வியடைந்தது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், 33வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள வில்வித்தை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று துருக்கியில் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 'ரீகர்வ்' பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் உலகின் 'நம்பர்-8' இந்திய அணி, 18வது இடத்தில் உள்ள உக்ரைன் அணியை சந்தித்தது. தீபிகா குமாரி, பஜன் கவுர், அன்கிதா பகத் அடங்கிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 3-1 என முன்னிலை வகித்திருந்தது. பின் ஏமாற்ற 3-5 என்ற (51-51, 55-52, 53-54, 52-54) என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

தகுதிச் சுற்றில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி, தரவரிசை அடிப்படையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us