/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/புதிய கேப்டன் குர்பிரீத் சிங்: இந்திய கால்பந்து அணிக்குபுதிய கேப்டன் குர்பிரீத் சிங்: இந்திய கால்பந்து அணிக்கு
புதிய கேப்டன் குர்பிரீத் சிங்: இந்திய கால்பந்து அணிக்கு
புதிய கேப்டன் குர்பிரீத் சிங்: இந்திய கால்பந்து அணிக்கு
புதிய கேப்டன் குர்பிரீத் சிங்: இந்திய கால்பந்து அணிக்கு
ADDED : ஜூன் 10, 2024 12:25 AM

தோகா: இந்திய கால்பந்து அணியின் புதிய கேப்டனாக கோல்கீப்பர் குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டார்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் 2026ல் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (13) உள்ளது. கடைசி இரு இடத்தில் ஆப்கானிஸ்தான் (5) குவைத் (4) உள்ளன.
இந்திய அணி, தனது கடைசி போட்டியில் கத்தார் அணியை அதன் சொந்த மண்ணில் நாளை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை 'டிரா' அல்லது தோல்வியடைந்தால், குவைத்-ஆப்கானிஸ்தான் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இப்போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் சுனில் செத்ரி ஓய்வு பெற்றதால், அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து 32, புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதுவரை இந்தியாவுக்காக 72 போட்டிகளில் விளையாடி உள்ளார்.