Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அரையிறுதியில் நெதர்லாந்து: 'யூரோ' கோப்பையில் முன்னேற்றம்

அரையிறுதியில் நெதர்லாந்து: 'யூரோ' கோப்பையில் முன்னேற்றம்

அரையிறுதியில் நெதர்லாந்து: 'யூரோ' கோப்பையில் முன்னேற்றம்

அரையிறுதியில் நெதர்லாந்து: 'யூரோ' கோப்பையில் முன்னேற்றம்

ADDED : ஜூலை 07, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
பெர்லின்: 'யூரோ' கோப்பை கால்பந்து அரையிறுதிக்கு நெதர்லாந்து அணி முன்னேறியது. காலிறுதியில் 2-1 என துருக்கியை வென்றது.

ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. பெர்லினில் நடந்த காலிறுதியில் துருக்கி, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்டா குலேர் துாக்கி அடித்த பந்தை துருக்கியின் சமேத் அகாய்டின் தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். இதற்கு நெதர்லாந்து அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் துருக்கி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் எழுச்சி கண்ட நெதர்லாந்து அணிக்கு 70வது நிமிடத்தில் மெம்பிஸ் டெபே துாக்கி அடித்த பந்தை ஸ்டீபன் டி விரிஜ் தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். பின் 76வது நிமிடத்தில் துருக்கியின் மெர்ட் முல்டர் ஒரு 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

அரையிறுதியில் யார்: அரையிறுதியில் ஸ்பெயின் - பிரான்ஸ் (ஜூலை 9, இடம்: முனிக்), நெதர்லாந்து - இங்கிலாந்து (ஜூலை 10, இடம்: டார்ட்மண்ட்) அணிகள் மோதுகின்றன. இரு போட்டிகளும் இரவு 12:30 மணிக்கு துவங்குகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us