/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/கால்பந்து: சென்னை அணியில் ஜிதேந்திராகால்பந்து: சென்னை அணியில் ஜிதேந்திரா
கால்பந்து: சென்னை அணியில் ஜிதேந்திரா
கால்பந்து: சென்னை அணியில் ஜிதேந்திரா
கால்பந்து: சென்னை அணியில் ஜிதேந்திரா
ADDED : ஜூன் 03, 2024 11:13 PM

சென்னை: சென்னை கால்பந்து அணியில் ஜிதேந்திரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதில் 2015, 2017-18 என இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த இரு சீசனில் 8வது இடம் பிடித்து ஏமாற்றிய சென்னை அணி, 2022-24 சீசனில், ஆறாவது இடம் பிடித்து 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
தற்போது 2024-25 வது சீசனுக்கான வீரர்கள் ஒப்பந்தம் நடந்து வருகிறது. இதையடுத்து முதல் வீரராக, ஜாம்ஷெட்பூர் அணியின் மத்திய கள வீரர் ஜிதேந்திரா சிங் 22, இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் சென்னை அணியில் இணைந்தார். இவரது வருகை, சென்னை அணிக்கு கைகொடுக்கலாம்.
பயிற்சியாளர் ஓவென் கோயல் கூறுகையில்,''சென்னை அணியில் மத்திய கள பகுதியை பலப்படுத்த வேண்டும். ஜிதேந்திரா சிங் வருகை இந்த பிரச்னையை சரி செய்யும்,'' என்றார்.
இதேபோல, கடந்த சீசனில் ஒடிசா அணிக்காக 13 கோல் அடித்தவர் பிஜி வீரர் ராய் கிருஷ்ணா. தவிர, சக வீரர்கள் 3 கோல் அடிக்க கைகொடுத்தார். இவரது ஒப்பந்தத்தை ஒடிசா அணி கூடுதலாக ஒரு ஆண்டு நீடித்தது.