/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/இந்தியா 134வது இடம்: கால்பந்து உலக தரவரிசையில்இந்தியா 134வது இடம்: கால்பந்து உலக தரவரிசையில்
இந்தியா 134வது இடம்: கால்பந்து உலக தரவரிசையில்
இந்தியா 134வது இடம்: கால்பந்து உலக தரவரிசையில்
இந்தியா 134வது இடம்: கால்பந்து உலக தரவரிசையில்
ADDED : செப் 18, 2025 08:08 PM

புதுடில்லி: 'பிபா' கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 134வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') வெளியிட்டது. இதில் இந்திய அணி, 133வது இடத்தில் இருந்து 134வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சமீபத்தில் தஜிகிஸ்தானில் நடந்த 'நேஷன்ஸ் கோப்பை' தொடரில் ஓமனை வீழ்த்திய இந்தியா, 3வது இடம் பிடித்தது.
'நடப்பு ஐரோப்பிய சாம்பியன்' ஸ்பெயின் அணி, கடந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது. கடந்த 2023, மார்ச் 23 முதல் விளையாடிய 27 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் வலம் வந்தது. 'நடப்பு உலக சாம்பியன்' அர்ஜென்டினா அணி, முதலிடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. பிரான்ஸ் அணி 2வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து அணி 4வது இடத்தில் நீடிக்கிறது. போர்ச்சுகல் அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. பிரேசில் அணி 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.