/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/நட்பு கால்பந்து: போர்ச்சுகல் வெற்றிநட்பு கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி
நட்பு கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி
நட்பு கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி
நட்பு கால்பந்து: போர்ச்சுகல் வெற்றி
ADDED : ஜூன் 05, 2024 10:39 PM

லிஸ்பன்: சர்வதேச நட்பு கால்பந்தில் போர்ச்சுகல் அணி 4-2 என பின்லாந்தை வீழ்த்தியது.
ஜெர்மனியில், 'யூரோ' கோப்பை கால்பந்து 17வது சீசன் (ஜூன் 14 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக நட்பு போட்டிகள் நடக்கின்றன.
போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்த போட்டியில் போர்ச்சுகல், பின்லாந்து அணிகள் மோதின. போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணிக்கு ரூபன் டயஸ் (17வது நிமிடம்), டியாகோ ஜோடா (45+4வது), புரூனோ பெர்ணான்டஸ் (56, 84வது) கைகொடுத்தனர். பின்லாந்து சார்பில் தீமு புக்கி (72, 76வது நிமிடம்) 2 கோல் அடித்தார்.
இத்தாலியில் நடந்த போட்டியில் 'நடப்பு யூரோ சாம்பியன்' இத்தாலி, துருக்கி அணிகள் மோதின. இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.