/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ வெற்றியுடன் விடைபெறுவாரா செத்ரி... * இன்று இந்தியா-குவைத் மோதல் வெற்றியுடன் விடைபெறுவாரா செத்ரி... * இன்று இந்தியா-குவைத் மோதல்
வெற்றியுடன் விடைபெறுவாரா செத்ரி... * இன்று இந்தியா-குவைத் மோதல்
வெற்றியுடன் விடைபெறுவாரா செத்ரி... * இன்று இந்தியா-குவைத் மோதல்
வெற்றியுடன் விடைபெறுவாரா செத்ரி... * இன்று இந்தியா-குவைத் மோதல்
ADDED : ஜூன் 05, 2024 11:35 PM

கோல்கட்டா: சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து இன்று விடைபெறுகிறார் கேப்டன் சுனில் செத்ரி. கடைசி போட்டியில் குவைத்துக்கு எதிராக களமிறங்குகிறார்.
உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணியை பொறுத்தவரையில் இதுவரை மோதிய முதல் 4 போட்டியில் 4 புள்ளி பெற்று 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (12) உள்ளது. கடைசி இரு இடத்தில் ஆப்கானிஸ்தான் (4) குவைத் (3) உள்ளன.
உலகத் தரவரிசையில் 121 வது இடத்தில் உள்ள இந்திய அணி, இன்று தனது ஐந்தாவது போட்டியில், 139 வது இடத்தில் உள்ள குவைத்தை சந்திக்கிறது. இதில் வெல்லும் பட்சத்தில், உலக கோப்பை கால்பந்து, மூன்றாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யலாம்.
கடைசி போட்டி: கோல்கட்டா, சால்ட் லேக் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியுடன், இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 39, சர்வதேச கால்பந்து அரங்கில் இருந்து விடைபெறுகிறார். கடந்த 19 ஆண்டுகளாக விளையாடிய இவர், 150 போட்டியில் 94 கோல் அடித்துள்ளார். இன்று சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியை கரை சேர்க்க முயற்சிக்கலாம்.
மத்திய கள வீரர்கள் அனிருத் தபா, சாங்டே என இருவரும் பந்தை கட்டுப்படுத்துவது, துல்லியமாக 'பாஸ்' செய்வதில் திணறுகின்றனர். அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து, புதிய வரவு லால்ரின்டிகா, டேவிட் லாலன்சங்கா நம்பிக்கை தரலாம்.
குவைத் தரப்பில் மோசென் ஹாரீப் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு சவால் கொடுக்கலாம்.