Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா * உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா * உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா * உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு

மூன்றாவது சுற்றுக்கு முன்னேறுமா இந்தியா * உலக கோப்பை கால்பந்தில் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 10, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
தோஹா: உலக கோப்பை கால்பந்து தகுதி போட்டியில், இன்று இந்தியா-கத்தார் அணிகள் மோதுகின்றன. இதில் வென்றால் இந்தியா முதன் முறையாக மூன்றாவது சுற்றுக்கு முன்னேறலாம்.

உலக கோப்பை கால்பந்து தொடர், 2026ல் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடக்கவுள்ளன. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. இதில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறலாம்.

இதுவரை முடிந்த போட்டி முடிவில் கத்தார் (5ல் 4 வெற்றி, 1 'டிரா') 13 புள்ளியுடன் அடுத்து சுற்றுக்குள் நுழைந்தது. அடுத்த 3 இடத்தில் இந்தியா (5 போட்டி, 1 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி, 5 புள்ளி), ஆப்கானிஸ்தான் (5), குவைத் (4) அணிகள் உள்ளன. இன்று கடைசி போட்டியில் இந்தியா-கத்தார், ஆப்கானிஸ்தான்-குவைத் மோதுகின்றன.

இதில் இந்தியா வெல்லும் பட்சத்தில் 8 புள்ளியுடன் இரண்டாவது இடம்பிடித்து, உலக கோப்பை கால்பந்து அரங்கில் முதன் முறையாக மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். மாறாக இந்தியா தோற்றால், அல்லது 'டிரா' செய்தால், தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

புதிய கேப்டன்

இதனால் கத்தாரை வென்றாக வேண்டிய நிலையில் இந்தியா களமிறங்குகிறது. இது அவ்வளவு எளிதல்ல. இந்திய அணி கடைசியாக பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. சுனில் செத்ரி ஓய்வு பெற்றுவிட்டார். புதிய கேப்டனாக அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து 32, செயல்பட உள்ளார். 72 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கைகொடுக்கலாம்.

மறுபக்கம் அடுத்த 'சுனில் செத்ரி' யார் எனத் தெரியாமல் இந்தியா தடுமாறுகிறது. ரஹிம் அலி, மன்விர் சிங், விக்ரம் பிரதாப் சிங் என பலர் இருந்தாலும் 'பினிஷிங்' இல்லாததால் கோல் வாய்ப்பு நழுவுகிறது. அனிருத் தபா, பிரண்டன் பெர்னாண்டஸ், அன்வர் அலி, ராகுல் பெகே சிறப்பாக செயல்பட்டால் நல்லது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us