/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'யூரோ' கால்பந்து: உக்ரைன் முதல் வெற்றி'யூரோ' கால்பந்து: உக்ரைன் முதல் வெற்றி
'யூரோ' கால்பந்து: உக்ரைன் முதல் வெற்றி
'யூரோ' கால்பந்து: உக்ரைன் முதல் வெற்றி
'யூரோ' கால்பந்து: உக்ரைன் முதல் வெற்றி
ADDED : ஜூன் 21, 2024 11:21 PM

டசல்டார்ப்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் உக்ரைன் அணி 2-1 என சுலோவாகியாவை வீழ்த்தியது.
ஜெர்மனியின் டசல்டார்ப்பில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து தொடருக்கான 'இ' பிரிவு லீக் போட்டியில் சுலோவாகியா, உக்ரைன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் சுலோவாகியாவின் இவான் ஷ்ரான்ஸ் ஒரு கோல் அடித்தார்.
பின் எழுச்சி கண்ட உக்ரைன் அணிக்கு மைகோலா ஷபரென்கோ (54வது நிமிடம்) ரோமன் யாரேம்சுக் (80வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முடிவில் உக்ரைன் அணி 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.