/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'யூரோ' கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து'யூரோ' கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து
'யூரோ' கால்பந்து: காலிறுதியில் ஜெர்மனி, இங்கிலாந்து
UPDATED : ஜூலை 01, 2024 12:23 AM
ADDED : ஜூன் 30, 2024 11:32 PM

டார்ட்மண்ட்: 'யூரோ' கோப்பை கால்பந்து காலிறுதிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து அணிகள் முன்னேறின.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. டார்ட்மண்ட் நகரில் நடந்த 'ரவுண்டு-16' போட்டியில் ஜெர்மனி, டென்மார்க் அணிகள் மோதின. முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.
இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் லுாகாஸ் ஹவர்ட்ஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனிக்கு 68வது நிமிடத்தில் ஜமால் முசியாலா ஒரு கோல் அடித்தார். இதற்கு டென்மார்க் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முடிவில் ஜெர்மனி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
பெர்லினில் நடந்த மற்றொரு 'ரவுண்டு-16' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இத்தாலி அணி 0-2 என சுவிட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது.