/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/இங்கிலாந்து-சுலோவேனியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'இங்கிலாந்து-சுலோவேனியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
இங்கிலாந்து-சுலோவேனியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
இங்கிலாந்து-சுலோவேனியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
இங்கிலாந்து-சுலோவேனியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
UPDATED : ஜூன் 26, 2024 11:33 PM
ADDED : ஜூன் 26, 2024 10:48 PM

கொலோன்: இங்கிலாந்து, சுலோவேனியா அணிகள் மோதிய 'யூரோ' கோப்பை கால்பந்து போட்டி 'டிரா' ஆனது. இங்கிலாந்து அணி 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறியது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-5' இங்கிலாந்து அணி, 57வது இடத்தில் உள்ள சுலோவேனியா அணியை சந்தித்தது.
ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் சுலோவேனியாவின் பெஞ்சமின் செஸ்கோ தலையால் முட்டி கோலடிக்க முயற்சித்த பந்தை இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டான் பிக்போர்டு கச்சிதமாக பிடித்தார். இதேபோல 30வது நிமிடத்தில் இங்கிலாந்தின் கேரி கேன் 'கோல் போஸ்ட்டை' நோக்கி துாக்கி அடித்த பந்தை சுலோவேனிய கோல்கீப்பர் ஜான் ஒப்லாக் பிடித்தார். முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+1வது நிமிடம்) இங்கிலாந்து வீரர் பால்மரின் கோல் அடிக்கும் முயற்சியை சுலோவேனிய கோல்கீப்பர் தடுத்தார். கடைசி வரை போராடிய இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில் போட்டி 0-0 என 'டிரா' ஆனது.
செர்பியா 'அவுட்'
முனிக் நகரில் நடந்த மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் டென்மார்க், செர்பியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
'சி' பிரிவு லீக் சுற்றின் முடிவில் ஒரு வெற்றி, 2 'டிரா' என 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இங்கிலாந்து 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறியது. தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இரு இடம் பிடித்த டென்மார்க், சுலோவேனியா அணிகளும் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன. இரண்டு 'டிரா', ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் கடைசி இடம் பிடித்த செர்பிய அணி வெளியேறியது.
பெல்ஜியம், ருமேனியா தகுதி
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'இ' பிரிவு லீக் போட்டியில் ருமேனியா, சுலோவாகியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் சுலோவாகியா அணியின் ஆன்ட்ரெஜ் டுடா ஒரு கோல் அடித்தார். இதற்கு, 37வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ருமேனியாவின் ரஸ்வான் மரின் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முடிவில் போட்டி 1-1 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
ஸ்டட்கர்ட் நகரில் நேற்று நடந்த மற்றொரு 'இ' பிரிவு லீக் போட்டியில் உக்ரைன், பெல்ஜியம் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது.
'இ' பிரிவில் தலா 4 புள்ளியுடன் 'டாப்-3' இடம் பிடித்த ருமேனியா, பெல்ஜியம், சுலோவாகியா, அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. உக்ரைன் 4 புள்ளி பெற்ற போதும், கோல் அடிப்படையில் பின் தங்கியதால், 4வது இடம் பெற்று, வெளியேறியது.