/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ஐஸ்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து: நட்பு கால்பந்தில் ஏமாற்றம்ஐஸ்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து: நட்பு கால்பந்தில் ஏமாற்றம்
ஐஸ்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து: நட்பு கால்பந்தில் ஏமாற்றம்
ஐஸ்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து: நட்பு கால்பந்தில் ஏமாற்றம்
ஐஸ்லாந்திடம் வீழ்ந்தது இங்கிலாந்து: நட்பு கால்பந்தில் ஏமாற்றம்
ADDED : ஜூன் 08, 2024 11:11 PM

லண்டன்: நட்பு கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி, ஐஸ்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஜெர்மனியில், யூரோ கோப்பை கால்பந்து 17வது சீசன் (ஜூன் 14 - ஜூலை 14) நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியும் நட்பு ரீதியிலான போட்டியில் பங்கேற்கின்றன.
லண்டனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஐஸ்லாந்தின் ஜான் தோர்ஸ்டெய்ன்சன் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய இங்கிலாந்து வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 0-1 என்ற கணக்கில் வீழ்ந்தது. சர்வதேச அரங்கில் 2வது முறையாக ஐஸ்லாந்து அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது. இதற்கு முன் 2016ல் நடந்த யூரோ கோப்பை 'ரவுண்டு-16' போட்டியில் ஐஸ்லாந்து அணி 2-1 என இங்கிலாந்தை தோற்கடித்தது.
ஜெர்மனி வெற்றி
ஜெர்மனியில் நடந்த போட்டியில் ஜெர்மனி, கிரீஸ் அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 2-1 என வெற்றி பெற்றது. ஜெர்மனி அணிக்கு ஹவர்ட்ஸ் (56வது நிமிடம்), பாஸ்கல் கிராஸ் (89வது) கைகொடுத்தனர். போலந்தின் வார்சாவில் நடந்த போட்டியில் போலந்து அணி 3-1 என உக்ரைனை வென்றது. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் பின்லாந்து, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 2-2 என 'டிரா' ஆனது.