/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/அரையிறுதியில் அர்ஜென்டினா * கோபா கால்பந்தில் அசத்தல்அரையிறுதியில் அர்ஜென்டினா * கோபா கால்பந்தில் அசத்தல்
அரையிறுதியில் அர்ஜென்டினா * கோபா கால்பந்தில் அசத்தல்
அரையிறுதியில் அர்ஜென்டினா * கோபா கால்பந்தில் அசத்தல்
அரையிறுதியில் அர்ஜென்டினா * கோபா கால்பந்தில் அசத்தல்
ADDED : ஜூலை 05, 2024 10:06 PM

டெக்சாஸ்: கோபா கால்பந்து அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா. நேற்று நடந்த காலிறுதியில் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' 4-2 என ஈகுவடாரை வீழ்த்தியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. டெக்சாசில் நேற்று நடந்த காலிறுதியில் நடப்பு சாம்பியன், உலகத் தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள அர்ஜென்டினா அணி, 30 வது இடத்திலுள்ள ஈகுவடாரை எதிர்கொண்டது. போட்டியின் 35வது நிமிடத்தில் மாக் அலிஸ்டர் கைகொடுக்க, லிசாண்ட்ரோ மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் (90+1 வது) ஈகுவடார் வீரர் ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடிக்க, போட்டி 1-1 என சமன் ஆனது. கோபா அமெரிக்க தொடர் விதிப்படி, பைனலுக்கு மட்டும் தான் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். இதனால், அரையிறுதி வெற்றியாளரை முடிவு செய்ய, போட்டி 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது.
மெஸ்சி ஏமாற்றம்
இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. முதல் வாய்ப்பில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி, பந்தை கோல் போஸ்ட் 'பார்' மீது அடித்து வீணடித்தார். மறுபக்கம் ஈகுவடார் வீரர் மெனா அடித்த பந்தை தடுத்து அசத்தினார் அர்ஜென்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் (ஸ்கோர் 0-0).
* இரண்டாவது வாய்ப்பில் அர்ஜென்டினாவின் ஆல்வரஸ் கோல் அடித்தார். ஈகுவடார் வீரர் மிண்டா அடித்த பந்தை, மீண்டும் தடுத்து அசத்தினார் எமிலியானோ (1-0).
* அடுத்து அர்ஜென்டினாவின் அலிஸ்டர், ஈகுவடாரின் எபோயா கோல் (2-1) கோல் அடித்தனர்.
* நான்காவது வாய்ப்பில் அர்ஜென்டினாவின் கொன்சாலோ, ஈகுவடாரின் ஜோர்டி (3-2) கோல் அடித்தனர்.
* ஐந்தாவது, கடைசி வாய்ப்பில் அர்ஜென்டினாவின் ஓடமெண்டி கோல் அடித்தார் (4-2). ஈகுவடார் தரப்பில் 5வது வாய்ப்பில் கோல் அடித்தாலும் வெற்றி பெற முடியாது என்பதால், போட்டி முடிவுக்கு வந்தது.
அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கோபா கால்பந்து தொடரில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.