/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/பைனலில் அர்ஜென்டினா அணி * கனடாவை வென்றதுபைனலில் அர்ஜென்டினா அணி * கனடாவை வென்றது
பைனலில் அர்ஜென்டினா அணி * கனடாவை வென்றது
பைனலில் அர்ஜென்டினா அணி * கனடாவை வென்றது
பைனலில் அர்ஜென்டினா அணி * கனடாவை வென்றது
ADDED : ஜூலை 10, 2024 10:10 PM

நியூ ஜெர்சி: கோபா கால்பந்து பைனலுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக முன்னேறியது அர்ஜென்டினா. அரையிறுதியில் கனடாவை 2-0 என வீழ்த்தியது.
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. நியூ ஜெர்சியில் நேற்று நடந்த அரையிறுதியில் நடப்பு சாம்பியன், உலகின் 'நம்பர்-1' அணியான அர்ஜென்டினா, 48 வது இடத்திலுள்ள கனடாவை எதிர்கொண்டது. போட்டியின் 22வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ரோட்ரிகோ டி பால், பந்தை சக வீரர் ஜூலியன் ஆல்வரசிற்கு 'பாஸ்' செய்தார்.
இதை வாங்கிய ஆல்வரஸ், பந்தை வலது காலால் உதைக்கு வலைக்குள் தள்ள, அர்ஜென்டினா அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
மெஸ்சி கோல்
இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா அணிக்கு கேப்டன் மெஸ்சி கைகொடுத்தார். 51வது நிமிடத்தில் என்ஜோ பெர்னாண்டசிடம் இருந்து பந்தை வாங்கிய மெஸ்சி, இடது காலால் கோல் அடித்தார். இத்தொடரில் மெஸ்சி அடித்த முதல் கோல் இது. தவிர கோபா அரங்கில் மெஸ்சியின் 14வது கோல் இது.
அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி, கடைசியாக களமிறங்கிய 25 போட்டியில், அடித்த 28வது கோல் ஆனது. முடிவில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. சர்வதேச அரங்கில் அர்ஜென்டினா பெற்ற தொடர்ச்சியான 10வது வெற்றியாக அமைந்தது.
109
நேற்று 1 கோல் அடித்த மெஸ்சி, சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். இவர் 186 போட்டியில் 109 கோல் அடித்துள்ளார்.
இதில் 'டாப்-4' வீரர்கள் விபரம்:
வீரர்/அணி போட்டி கோல்
ரொனால்டோ/போர்ச்சுகல் 212 130
மெஸ்சி/அர்ஜென்டினா 186 109
அலி தயேய்/ஈரான் 148 108
சுனில் செத்ரி/இந்தியா 151 94