/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா அர்ஜென்டினா * கோபா அமெரிக்கா கால்பந்து துவக்கம் 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா அர்ஜென்டினா * கோபா அமெரிக்கா கால்பந்து துவக்கம்
'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா அர்ஜென்டினா * கோபா அமெரிக்கா கால்பந்து துவக்கம்
'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா அர்ஜென்டினா * கோபா அமெரிக்கா கால்பந்து துவக்கம்
'ஹாட்ரிக்' கோப்பை வெல்லுமா அர்ஜென்டினா * கோபா அமெரிக்கா கால்பந்து துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 11:01 PM

அட்லாண்டா: கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் இன்று அர்ஜென்டினா, கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சாம்பியன், மெஸ்சியின் அர்ஜென்டினா அணி சாதிக்க காத்திருக்கிறது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் 48 வது சீசன் அமெரிக்காவில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள், நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டி லீக் முறையில் நடக்கிறது. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பைனல் ஜூலை 13ல் புளோரிடாவில் நடக்க உள்ளது.
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி, 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் கனடாவை சந்திக்க உள்ளது.
சர்வதேச கால்பந்து அரங்கில் ஸ்பெயின் அணி 2008 (யூரோ), 2010 (உலக கோப்பை), 2012 (யூரோ) என தொடர்ந்து மூன்று பெரிய தொடரில் கோப்பை வென்று சாதித்துள்ளது.
இந்த வரிசையில் 2021ல் கோபா சாம்பியன் ஆன அர்ஜென்டினா, 2022ல் உலக கோப்பை கைப்பற்றியது. இம்முறை மீண்டும் அசத்தினார் சர்வதேச அரங்கில் 'ஹாட்ரிக்' கோப்பை வசப்படுத்திய இரண்டாவது அணி என பெருமை பெறலாம்.
மெஸ்சி கடைசி
கேப்டன் மெஸ்சி 37, அர்ஜென்டினா அணிக்காக பங்கேற்கும் கடைசி தொடராக இது இருக்கலாம். இதுவரை 182 போட்டியில் 108 கோல் அடித்துள்ளார். தவிர சமீபத்திய சீசனில் 12 கோல் அடித்து, சக வீரர்கள் 13 கோல் அடிக்க உதவினார். இந்த 'பார்ம்' கைகொடுத்தால் மீண்டும் கோப்பை வெல்லலாம். இவருக்கு சக வீரர் ஏஞ்சல் டி மரியா உதவ காத்திருக்கிறார்.
பிரேசில் பலம்
பிரேசில் அணிக்கு வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ, ராபினா, 17 வயது நட்சத்திரம் என்ரிக் கைகொடுக்க உள்ளனர். தவிர உக்ரைன், மெக்சிகோ, அமெரிக்கா, கொலம்பிய அணிகளும் கோப்பைக்கான போட்டியில் குதித்துள்ளன.
15
கோபா அமெரிக்க தொடரில் அர்ஜென்டினா, உருகுவே அணிகள் அதிகபட்சமாக தலா 15 முறை கோப்பை வென்றன. 9 கோப்பை வென்ற பிரேசில் அணி 2வதாக உள்ளது. மற்ற எந்த அணியும் 2க்கும் மேல் கோப்பை வெல்லவில்லை.
10 லட்சம் டிக்கெட்
கோபா தொடரில் பைனல் உட்பட மொத்தம் 32 போட்டி நடக்கும். இதற்காக இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட் விற்றுள்ளன.
வருவாரா நெய்மர்
பிரேசில் அணி கேப்டன் நெய்மர் 32. கடைசியாக கடந்த 2023, அக்., 17ல் நடந்த உருகுவே அணிக்கு எதிரான உலக கோப்பை தகுதிச்சுற்றில் பங்கேற்றார். அப்போது இவரது வலது முழங்கால் தசைநாரில் காயம் ஏற்பட்டது. இதனால் கோபா தொடரில் பங்கேற்கவில்லை.