/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி: ஆசிய கோப்பை லீக் போட்டியில்இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி: ஆசிய கோப்பை லீக் போட்டியில்
இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி: ஆசிய கோப்பை லீக் போட்டியில்

அபுதாபி: ஆசிய கோப்பை லீக் போட்டியில் அசத்திய இலங்கை, யு.ஏ.இ., அணிகள் வெற்றி பெற்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய கோப்பை ('டி-20') 17வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் ஓமன், யு.ஏ.இ., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
யு.ஏ.இ., அணிக்கு அலிஷான் ஷரபு, கேப்டன் முகமது வாசீம் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது அலிஷான் (51 ரன், 7x4, 1x6) அவுட்டானார். கேப்டன் வாசீம் (69 ரன், 3x6, 6x4) 'ரன்-அவுட்' ஆனார். முகமது ஜோஹைப் (21), ஹர்ஷித் கவுஷிக் (19*) ஓரளவு கைகொடுத்தனர். யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன் எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய ஓமன் அணிக்கு கேப்டன் ஜதிந்தர் சிங் (20), ஆர்யன் பிஷ்ட் (24), வினாயக் சுக்லா (20) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற ஓமன் அணி 18.4 ஓவரில், 130 ரன்னுக்கு சுருண்டு, 42 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. யு.ஏ.இ., சார்பில் ஜுனைடு சித்திக் 4 விக்கெட் சாய்த்தார்.
இதனையடுத்து 'ஏ' பிரிவில் இந்திய அணி 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. யு.ஏ.இ., அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
இலங்கை வெற்றி
துபாயில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஹாங்காங், 'நடப்பு சாம்பியன்' இலங்கை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
ஹாங்காங் அணிக்கு நிஜாகத் கான் (52*), அன்ஷி ராத் (48), ஜீஷான் அலி (23) கைகொடுக்க, 20 ஓவரில் 149/4 ரன் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (68), குசால் பெரேரா (20), ஹசரங்கா (20*) கைகொடுக்க, 18.5 ஓவரில் 153/6 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பெற்றது.