/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலுக்கு முன்னேறியது கோவை * சதம் விளாசினார் சாய் சுதர்சன்பைனலுக்கு முன்னேறியது கோவை * சதம் விளாசினார் சாய் சுதர்சன்
பைனலுக்கு முன்னேறியது கோவை * சதம் விளாசினார் சாய் சுதர்சன்
பைனலுக்கு முன்னேறியது கோவை * சதம் விளாசினார் சாய் சுதர்சன்
பைனலுக்கு முன்னேறியது கோவை * சதம் விளாசினார் சாய் சுதர்சன்
ADDED : ஜூலை 30, 2024 11:17 PM

திண்டுக்கல்: டி.என்.பி.எல்., தகுதிச்சுற்று 1ல் சாய் சுதர்சன் சதம் கைகொடுக்க, கோவை அணி 7 விக்கெட்டில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் 8வது சீசன் நடக்கிறது. லீக் சுற்று முடிந்த நிலையில் நேற்று 'பிளே ஆப்' போட்டி துவங்கின. நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த தகுதிச்சுற்று 1ல் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த நடப்பு சாம்பியன் கோவை, திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங் தேர்வு செய்தார்.
சாத்விக் அபாரம்
திருப்பூர் அணிக்கு அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. 10.3 ஓவரில் முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த போது, ரஹேஜா (55) ரன் அவுட்டானார். மறுபக்கம் சாத்விக், 34 வது பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 67 ரன் எடுத்தார். திருப்பூர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 200 ரன் குவித்தது. முகமது அலி (45), சாய் கிஷோர் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
மிரட்டிய சுதர்சன்
கடின இலக்கைத் துரத்திய கோவை அணிக்கு விக்னேஷ் (0), சுஜாய் (19) மோசமான துவக்கம் தந்தனர். சுரேஷ் குமாரும் (5) நிலைக்கவில்லை. சாய் சுதர்சன், முகிலேஷ் இணைந்து வேகமாக ரன் சேர்த்தனர். சாய் சுதர்சன் 32 வது பந்தில் அரைசதம் கடந்தார். 72 ரன்னில் தப்பிப்பிழைத்த சாய் சுதர்சன், முகிலேஷ் வீசிய 17 வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடிக்க, இலக்கை வேகமாக நெருங்கியது கோவை.
புவனேஷ்வரன் வீசிய 19 வது ஓவரில் 2 சிக்சர், 1 பவுண்டரி என தொடர்ந்து சாய் சுதர்சன் விளாச, கோவை அணி 18.5 ஓவரில் 201/3 ரன் எடுத்து வெற்றி பெற்று பைனலுக்கு (ஆக. 4, சென்னை) முன்னேறியது. சாய் சுதர்சன் (123 ரன், 56 பந்து), முகிலேஷ் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்னொரு வாய்ப்பு
நேற்று தோல்வியடைந்த திருப்பூர் அணி, பைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெல்லும் அணியுடன், தகுதிச்சுற்று 2ல் (ஆக. 2) மோத வேண்டும். இதில் வென்றால் பைனலுக்கு செல்லலாம்.