/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோவை அணி கலக்கல் வெற்றி * திருச்சியை வீழ்த்தியதுகோவை அணி கலக்கல் வெற்றி * திருச்சியை வீழ்த்தியது
கோவை அணி கலக்கல் வெற்றி * திருச்சியை வீழ்த்தியது
கோவை அணி கலக்கல் வெற்றி * திருச்சியை வீழ்த்தியது
கோவை அணி கலக்கல் வெற்றி * திருச்சியை வீழ்த்தியது
ADDED : ஜூலை 16, 2024 11:00 PM

கோவை: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோவை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் அர்ஜுன் மூர்த்தி (3) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். வசீம் அகமது (17) கைகொடுக்கவில்லை. கேப்டன் ஆண்டனி தாஸ் (0) முதல் பந்தில் போல்டு ஆனார். நிர்மல் குமார் (3), சரவணகுமார் (1) நிலைக்கவில்லை.
சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் 56 ரன்கள் சேர்த்திருந்த போது, சஞ்சய் யாதவ் (34) யுதீஸ்வரன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசி ஓவரை வீசிய யுதீஸ்வரன் பந்தில் ஜாபர் ஜமால் மூன்று சிக்ஸர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் திருச்சி அணி ஒன்பது விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்தது. ஜாபர் ஜமால் (41*), விக்னேஷ் (0*) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கோவை அணி சார்பில் ஷாருக்கான், முகமது ஆகியோர் தலா மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய கோவை அணியின் சுரேஷ் குமார் (0), சாய் சுதர்சனை (4), முதல் ஓவரிலேயே அதிசயராஜ் டேவிட்சன் திருப்பி அனுப்பினார். பின் இணைந்த சுஜய், முகிலேஷ் ஜோடி, 92 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். முகிலேஷ் (63*), சுஜய் (48*) அவுட்டாகவில்லை. கோவை அணி 16.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.