Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்திய அணி இமாலய வெற்றி: ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் விளாசல்

இந்திய அணி இமாலய வெற்றி: ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் விளாசல்

இந்திய அணி இமாலய வெற்றி: ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் விளாசல்

இந்திய அணி இமாலய வெற்றி: ஹர்மன்பிரீத், ரிச்சா கோஷ் விளாசல்

ADDED : ஜூலை 21, 2024 11:49 PM


Google News
Latest Tamil News
தம்புலா: கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ரிச்சா கோஷ் அரைசதம் விளாச இந்திய அணி 78 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இலங்கையின் தம்புலாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற யு.ஏ.இ., அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா (13) சுமாரான துவக்கம் கொடுத்தார். ஷபாலி வர்மா (37) நம்பிக்கை தந்தார். ஜெமிமா (14) நிலைக்கவில்லை. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (66) அரைசதம் கடந்தார். ஹீனா வீசிய கடைசி ஓவரில் வரிசையாக 5 பவுண்டரி விரட்டிய ரிச்சா கோஷ் (64*), 26 பந்தில் அரைசதம் விளாசினார். இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ரன் எடுத்தது.

கடின இலக்கை விரட்டிய யு.ஏ.இ., அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 123 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கவிஷா (40*), கேப்டன் ஈஷா ஓசா (38) ஆறுதல் தந்தனர். இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்தது. ஆட்ட நாயகி விருதை ரிச்சா கோஷ் வென்றார்

ஸ்ரேயங்கா விலகல்

இளம் இந்திய 'சுழல்' வீராங்கனை ஸ்ரேயங்கா பாட்டீல் 21. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 'கேட்ச்' செய்த போது இவரது இடது கை நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஆசிய கோப்பையில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மற்றொரு 'சுழல்' வீராங்கனை தனுஜா 26, நேற்று அறிமுகமானார்.

அதிகபட்ச ஸ்கோர்

பெண்களுக்கான சர்வதேச 'டி-20' அரங்கில், இந்திய அணி தனது அதிகபட்ச ஸ்கோரை (201/5) பெற்றது. இதற்கு முன் 198/4 ரன் (எதிர்: இங்கிலாந்து, 2018, இடம்: மும்பை) எடுத்ததே அதிகம்.

* ஆசிய கோப்பை அரங்கில் சிறந்த ஸ்கோரை (201/5) பதிவு செய்தது இந்தியா. இதற்கு முன் இந்திய அணி 181/4 ரன் (எதிர்: மலேசியா, 2022) எடுத்திருந்ததே அதிகம்.

3415 ரன்

சர்வதேச 'டி-20' அரங்கில் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் மந்தனா (3378 ரன்), ஆஸ்திரேலியாவின் மேக் லானிங்கை (3405) முந்தி 2வது இடம் பிடித்தார் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (3415). முதலிடத்தில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (4348 ரன்) உள்ளார்.

பாகிஸ்தான் அபாரம்

மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. கபிதா ஜோஷி (31*), சீதா ராணா (26), பூஜா (25) கைகொடுக்க, நேபாளம் அணி 20 ஓவரில் 108/6 ரன் எடுத்தது. சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 11.5 ஓவரில் 110/1 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல் பெரோசா (57), முனீபா அலி (46*) அசத்தினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us