/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பைனலுக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்பைனலுக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்
பைனலுக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்
பைனலுக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்
பைனலுக்கு முன்னேறியது தென் ஆப்ரிக்கா: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்
UPDATED : ஜூன் 27, 2024 10:17 PM
ADDED : ஜூன் 26, 2024 10:58 PM

டிரினிடாட்: உலக கோப்பை வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது. அரையிறுதியில் யான்சென், ரபாடா உள்ளிட்ட 'வேகங்கள்' மிரட்ட, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் பரிதாபமாக வெளியேறியது.
வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று, டிரினிடாட்டில் நடந்த முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின.
விக்கெட் சரிவு:'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, தென் ஆப்ரிக்க 'வேகங்கள்' தொல்லை தந்தனர். மார்கோ யான்சன் பந்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் (0), குல்பதின் நைப் (9) அவுட்டாகினர். ரபாடா 'வேகத்தில்' இப்ராஹிம் ஜத்ரன் (2), முகமது நபி (0) போல்டாகினர். தொடர்ந்து மிரட்டிய யான்சன் பந்தில் கரோட்டே (2) வெளியேறினார். 'டாப்-ஆர்டர்' ஏமாற்ற 'பவர்-பிளே' ஓவரின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 28/5 ரன் எடுத்த தடுமாறியது.
இச்சரிவிலிருந்து ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் மீளவில்லை. அன்ரிச் நோர்க்யா பந்தில் அஸ்மதுல்லா ஓமர்சாய் (10), கேப்டன் ரஷித் கான் (8) ஆட்டமிழந்தனர். ஷம்சி 'சுழலில்' கரீம் ஜனத் (8), நுார் அகமது (0), நவீன்-உல்-ஹக் (2) சிக்கினர். ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பரூக்கி (2) அவுட்டாகாமல் இருந்தார்.
தென் ஆப்ரிக்கா சார்பில் யான்சன் 3 விக்கெட் சாய்த்தார்.
எளிய வெற்றி:சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக் (5) ஏமாற்றினார். பின் இணைந்த ரீசா ஹென்டிரிக்ஸ், கேப்டன் மார்க்ரம் ஜோடி நம்பிக்கை தந்தது. நவீன்-உல்-ஹக் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் மார்க்ரம். அஸ்மதுல்லா ஓமர்சாய் வீசிய 9வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஹென்டிரிக்ஸ் வெற்றியை உறுதி செய்தார்.
தென் ஆப்ரிக்க அணி 8.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹென்டிரிக்ஸ் (29), மார்க்ரம் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.
8 வெற்றி
தென் ஆப்ரிக்க அணி தொடர்ந்து 8 போட்டியில் வென்றது. இதன் மூலம் 'டி-20' உலக கோப்பை அரங்கில் தொடர்ச்சியாக அதிக வெற்றியை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை ஆஸ்திரேலியாவுடன் (2022-2024) பகிர்ந்து கொண்டது.
முற்றுப்புள்ளி
ஐ.சி.சி., தொடர்களின் 'நாக்-அவுட்' போட்டிகளில் (1992-2023) தென் ஆப்ரிக்க அணி ஏமாற்றி வந்தது. நீண்ட கால சோகத்திற்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது. முன்னதாக 50 ஓவர் உலக கோப்பையில் 5 அரையிறுதி (1992, 1999, 2007, 2015, 2023), 2 காலிறுதி (1996, 2011), 'டி-20' உலக கோப்பையில் 2 அரையிறுதி (2009, 2014), ஒரு 'சூப்பர்-12' (2022), சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு அரையிறுதி (2013) என 11 போட்டிகளில் தோல்வியடைந்தது.
56/10
'டி-20' உலக கோப்பை அரையிறுதியில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியான ஆப்கானிஸ்தான் (56/10). இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி 101 ரன்னுக்கு (எதிர்: இலங்கை, 2009, இடம்: லண்டன், ஓவல்) சுருண்டது.