Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/நெதர்லாந்தை வென்றது வங்கதேசம் * அரைசதம் விளாசினார் சாகிப்

நெதர்லாந்தை வென்றது வங்கதேசம் * அரைசதம் விளாசினார் சாகிப்

நெதர்லாந்தை வென்றது வங்கதேசம் * அரைசதம் விளாசினார் சாகிப்

நெதர்லாந்தை வென்றது வங்கதேசம் * அரைசதம் விளாசினார் சாகிப்

UPDATED : ஜூன் 13, 2024 11:44 PMADDED : ஜூன் 13, 2024 11:13 PM


Google News
Latest Tamil News
கிங்ஸ்டன்: 'டி-20' உலக கோப்பை போட்டியில் வங்கதேச அணி, 25 ரன்னில் நெதர்லாந்தை வீழ்த்தியது. சாகிப் அல் ஹசன் அரைசதம் விளாசினார்.

வெஸ்ட் இண்டீசில் நேற்று நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி துவங்க 20 நிமிடம் தாமதம் ஆனது. 'டாஸ்' வென்ற நெதர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது.

சாகிப் விளாசல்

வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (1) ஜோடி துவக்கம் கொடுத்தது. ஆர்யன் பந்தில் லிட்டன் தாஸ் (1) வீழ்ந்தார். தன்ஜித், சாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 48 ரன் சேர்த்தது. இந்நிலையில் வான் மீகெரன் பந்தில் தன்ஜித் (35) அவுட்டானார். தவ்ஹித் (9) நீடிக்கவில்லை.

கடைசி நேரத்தில் மகமதுல்லா, பிரிங்கிள் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். இவர் 25 ரன் எடுத்து, வான் மீகெரன் பந்தில் வீழ்ந்தார். சாகிப் அரைசதம் எட்டினார். வங்கதேச அணி 20 ஓவரில் 159/5 ரன் எடுத்தது. சாகிப் (64), ஜேக்கர் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.

சைபராந்த் ஆறுதல்

நெதர்லாந்து அணிக்கு மைக்கேல் (18), மேக்ஸ் ஓ தவுத் (12) ஜோடி துவக்கம் கொடுத்தது. விக்ரம்ஜித் (26), சைபராந்த் (33) சற்று கைகொடுத்தனர். மற்ற வீரர்கள் ஏமாற்ற நெதர்லாந்து அணி 20 ஓவரில் 134/8 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. வங்கதேச அணி 3 போட்டியில் 4 புள்ளி எடுத்து, அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்தது.

பாக்., வாய்ப்பு எப்படி

'ஏ' பிரிவில் இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியா (6 புள்ளி) அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. அமெரிக்கா (4, ரன்ரேட் 0.127), பாகிஸ்தான் (2, 0.191), கனடா (2), அயர்லாந்து (0) அடுத்தடுத்து உள்ளன.

* அமெரிக்க அணி இன்று அயர்லாந்தை சந்திக்கிறது. இதில் வென்றால் 6 புள்ளியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறலாம். பாகிஸ்தான் வெளியேறும்.

* ஒருவேளை அமெரிக்கா தோற்றால், பாகிஸ்தான் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு அதிகரிக்கும். தனது கடைசி போட்டியில் அயர்லாந்தை (ஜூன் 16) அதிக ரன் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.

* அப்போது பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் தலா 4 புள்ளி பெற்றிருக்கும். 'ரன் ரேட்' அடிப்படையில் பாகிஸ்தான் 'சூப்பர்-8' சுற்றுக்கு செல்லலாம்.

வெல்லுமா ஆப்கன்

தரவுபாவில் இன்று நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் (4), பப்புவா நியூ கினியா (0) மோதுகின்றன. இதில் வென்றால் ஆப்கானிஸ்தான் 6 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நியூசிலாந்து அணி வெளியேறும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us