/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஓமனை வென்றது ஆஸி., * வார்னர், ஸ்டாய்னிஸ் அரைசதம்ஓமனை வென்றது ஆஸி., * வார்னர், ஸ்டாய்னிஸ் அரைசதம்
ஓமனை வென்றது ஆஸி., * வார்னர், ஸ்டாய்னிஸ் அரைசதம்
ஓமனை வென்றது ஆஸி., * வார்னர், ஸ்டாய்னிஸ் அரைசதம்
ஓமனை வென்றது ஆஸி., * வார்னர், ஸ்டாய்னிஸ் அரைசதம்
ADDED : ஜூன் 06, 2024 11:52 PM

பிரிட்ஜ்டவுன்: 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தியது.
வெஸ்ட் இண்டீசின் பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடந்த 'டி-20' உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, ஓமன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஓமன் பீல்டிங் தேர்வு செய்தது.
வார்னர் அபாரம்
ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், டிராவிஸ் ஹெட் (12) ஜோடி சுமார் துவக்கம் கொடுத்தது. கேப்டன் மிட்சல் மார்ஷ் (14), மேக்ஸ்வெல் (0) ஏமாற்றினர். பின் வந்த ஸ்டாய்னிஸ், 'ஹாட்ரிக்' வாய்ப்பை தடுத்தார். வார்னர் (56) அரைசதம் விளாச, ஸ்டாய்னிஸ் சிக்சர் மழை பொழிந்தார். டிம் டேவிட் (9) ரன் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 164 ரன் எடுத்தது. அரைசதம் விளாசிய ஸ்டாய்னிஸ் (67 ரன், 36 பந்து, 6 சிக்சர், 2 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.
ஓமன் அணி கேப்டன் அகுய்ப் இலியாஸ் 18 ரன் எடுத்தார். அயான் கான் (36), மெஹ்ரான் கான் (27) அதிகபட்ச ரன் எடுத்து ஆறுதல் தந்தனர். ஒமன் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 125 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டாய்னிஸ் 3 சாய்த்தார்.
மாறிய 'டிரசிங் ரூம்'
நேற்று ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். காலரி வழியாக படிகளில் ஏறிய இவர், தவறுதலாக ஓமன் அணியினரின் 'டிரசிங் ரூம்' நோக்கி சென்றார். அருகில் சென்ற பிறகு சுதாரித்த வார்னர், மீண்டும் கீழிறங்கி, ஆஸ்திரேலிய வீரர்கள் பகுதிக்கு சென்றார்.
உகாண்டா முதல் வெற்றி
அமெரிக்காவில் நடந்த மற்றொரு போட்டியில் உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி 19.1 ஓவரில் 77 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய உகாண்டா அணி, ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் ரஜத் அலி (33) கைகொடுக்க, 18.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 78 ரன் எடுத்து 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது. 'டி-20' உலக கோப்பை அரங்கில் உகாண்டா பெற்ற முதல் வெற்றி இது.
உலக சாதனை
உகாண்டா வீரர் பிராங்க் சுபுகா, 4 ஓவரில் 4 ரன் மட்டும் தந்து, 2 விக்கெட் சாய்த்தார். இது 'டி-20' உலக கோப்பை அரங்கில் புதிய உலக சாதனை.