/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: ஆசிய கோப்பையில் அசத்தல்வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: ஆசிய கோப்பையில் அசத்தல்
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: ஆசிய கோப்பையில் அசத்தல்
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: ஆசிய கோப்பையில் அசத்தல்
வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை: ஆசிய கோப்பையில் அசத்தல்
ADDED : ஜூலை 20, 2024 11:21 PM

தம்புல: விஷ்மி அரைசதம் கடந்து கைகொடுக்க இலங்கை பெண்கள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கையின் தம்புலாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை ('டி-20') 9வது சீசன் நடக்கிறது. 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், இலங்கை அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த வங்கதேச அணிக்கு ரபேயா கான் (10), ஷோர்னா (25), கேப்டன் நிகர் சுல்தானா (48*) ஓரளவு கைகொடுக்க, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்தது. இலங்கை சார்பில் உதேஷிகா பிரபோதனி, இனோஷி பிரியதர்ஷினி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு விஷ்மி (51), ஹர்ஷிதா (33) நம்பிக்கை அளித்தனர். மருபா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கவிஷா வெற்றியை உறுதி செய்தார். இலங்கை அணி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 114 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கவிஷா (12), ஹாசினி (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா - யு.ஏ.இ., மோதல்
'ஏ' பிரிவு லீக் போட்டியில் இன்று 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி மீண்டும் வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதிக்கான இடத்தை உறுதி செய்யலாம்.
மலேசியாவை வீழ்த்தியது தாய்லாந்து
மற்றொரு 'பி' பிரிவு லீக் போட்டியில் தாய்லாந்து, மலேசியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற முதலில் 'பேட்' செய்த தாய்லாந்து அணிக்கு நன்னாபட் (40) கைகொடுக்க 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்தது. பின் மலேசிய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன் மட்டும் எடுத்து 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வான் ஜூலியாவின் (52) அரைசதம் வீணானது.