/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை அணி கேப்டன் அசலங்கா * இந்திய 'டி-20' தொடருக்கான...இலங்கை அணி கேப்டன் அசலங்கா * இந்திய 'டி-20' தொடருக்கான...
இலங்கை அணி கேப்டன் அசலங்கா * இந்திய 'டி-20' தொடருக்கான...
இலங்கை அணி கேப்டன் அசலங்கா * இந்திய 'டி-20' தொடருக்கான...
இலங்கை அணி கேப்டன் அசலங்கா * இந்திய 'டி-20' தொடருக்கான...
ADDED : ஜூலை 23, 2024 11:14 PM

பல்லேகலே: 'டி-20' தொடருக்கான இலங்கை அணி கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி முதல் கட்டமாக 3 'டி-20' (ஜூலை 27, 28, 30) பங்கேற்கிறது. ரோகித் சர்மா, கோலி, ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்ற நிலையில், இந்தியா சார்பில் புதிய 'டி-20' அணி களமிறங்குகிறது. கேப்டனாக சூர்யகுமார், பயிற்சியாளராக காம்பிர் அசத்த காத்திருக்கின்றனர்.
சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடரில் இலங்கை அணி விரைவாக வெளியற, கேப்டன் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்கா விலகினார். புதிய கேப்டனாக சரித் அசலங்கா நியமிக்கப்பட்டுள்ளார். வீரராக வனிந்து ஹசரங்கா நீடிக்கிறார். அனுபவ 'ஆல்-ரவுண்டர்' ஏஞ்சலோ மாத்யூஸ், தனஞ்சயா டி சில்வா, சதீரா சமரவிக்ரமா நீக்கப்பட்டுள்ளனர். தினேஷ் சண்டிமால், குசல் ஜனித் பெரேரா, சமிந்து விக்ரமசிங்கே வாய்ப்பு பெற்றுள்ளனர்.
16 பேர் கொண்ட இலங்கை அணி:
சரித் அசலங்கா (கேப்டன்), நிசங்கா, குசால் ஜனித் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சண்டிமால், கமின்டு மெண்டிஸ், தசுன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக் ஷனா, சமிந்து விக்ரமசிங்கே, மதீஷா பதிரனா, நுவான் துஷாரா, துஷ்மந்தா சமீரா, பினுரா பெர்னாண்டோ.