Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் சதம்

தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் சதம்

தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் சதம்

தென் ஆப்ரிக்கா ரன் குவிப்பு: பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் சதம்

ADDED : ஜூன் 28, 2025 10:05 PM


Google News
Latest Tamil News
புலவாயோ: முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியஸ், கார்பின் போஷ் சதம் விளாசினர்.

ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் புலவாயோவில் நடக்கிறது.

'டாஸ்' வென்று முதல் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி 55/4 ரன் எடுத்து தவித்தது. பின் அறிமுக வீரர்களான வான்-டிரே பிரிட்டோரியஸ், டிவால்ட் பிரவிஸ் கைகொடுத்தனர்.

வின்சன்ட் மசேகேசா வீசிய 36வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்ட பிரவிஸ், 38 பந்தில் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது பிரவிஸ் (51) அவுட்டானார்.

பிரிட்டோரியஸ், 112 பந்தில் சதத்தை எட்டினார். பிரிட்டோரியஸ், 153 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.அடுத்து வந்த கார்பின் போஷ், தன்பங்கிற்கு சதம் விளாசினார். கேப்டன் கேஷவ் மஹாராஜ் (21) சோபிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன் எடுத்திருந்தது. போஷ் (100), மகாபா (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் சிவாங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

இளம் வீரர்லுவான்-டிரே பிரிட்டோரியஸ் (153), இளம் வயதில் (19 ஆண்டு, 93 நாள்) டெஸ்டில் சதமடித்த தென் ஆப்ரிக்க வீரரானார். இதற்கு முன், 1964ல் கிரீம் போலக் (19 ஆண்டு, 317 நாள், எதிர்: ஆஸி., இடம்: சிட்னி) இச்சாதனை படைத்திருந்தார். தவிர இவர், இம்மைல்கல்லை எட்டிய 5வது சர்வதேச வீரரானார்.

* அறிமுக டெஸ்டில் சதம் விளாசிய 7வது தென் ஆப்ரிக்க வீரர் என்ற பெருமை பெற்றார் பிரிட்டோரியஸ். தவிர இவர், அறிமுக டெஸ்டில் சதமடித்த இளம் தென் ஆப்ரிக்க வீரரானார். இதற்கு முன், 2003ல் ஜாக்ஸ் ருடால்ப் (21 ஆண்டு, 355 நாள், 222* ரன், எதிர்: வங்கம், இடம்: சாட்டோகிராம்) சாதித்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us