/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சுப்மன் கில் இரட்டை சதம் * இந்திய அணி ரன் குவிப்புசுப்மன் கில் இரட்டை சதம் * இந்திய அணி ரன் குவிப்பு
சுப்மன் கில் இரட்டை சதம் * இந்திய அணி ரன் குவிப்பு
சுப்மன் கில் இரட்டை சதம் * இந்திய அணி ரன் குவிப்பு
சுப்மன் கில் இரட்டை சதம் * இந்திய அணி ரன் குவிப்பு

பர்மிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின் டிராபி') பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று 2ம் நாள் ஆட்டம் நடக்கிது. டெஸ்ட் அரங்கில் ஜடேஜா 23வது அரைசதம் அடித்தார். ஆறாவது விக்கெட்டுக்கு 203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார். மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த சுப்மன் கில், டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக இரட்டை சதம் அடித்தார்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 483/6 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (209), வாஷிங்டன் சுந்தர் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.