Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/'ரோல்-மாடல்' வாஷிங்டன் சுந்தர்: சாய் சுதர்சன் பெருமிதம்

'ரோல்-மாடல்' வாஷிங்டன் சுந்தர்: சாய் சுதர்சன் பெருமிதம்

'ரோல்-மாடல்' வாஷிங்டன் சுந்தர்: சாய் சுதர்சன் பெருமிதம்

'ரோல்-மாடல்' வாஷிங்டன் சுந்தர்: சாய் சுதர்சன் பெருமிதம்

ADDED : ஜூன் 16, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
லண்டன்: ''கிரிக்கெட் அரங்கில் வாஷிங்டன் தான் எனது ரோல்-மாடல்,'' என சாய் சுதர்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன் என இரு தமிழக வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

விரைவான வளர்ச்சி: வாஷிங்டனை 25, பொறுத்தவரை இளம் பருவத்திலேயே முத்திரை பதித்தார். 2016ல் ஜூனியர் உலக கோப்பை தொடரில் 'ஸ்பெஷலிஸ்ட் பேட்டராக' வாய்ப்பு பெற்றார். 2017ல், 18 வயதில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். 2021ல், 20 வயதில் டெஸ்ட் அணியில் முதன் முதலில் இடம் பிடித்தார். 'பார்டர்-கவாஸ்கர்' தொடரில், இந்திய வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். சுழற்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டரான' இவர், 9 டெஸ்ட் (468 ரன், 25 விக்.,), 23 ஒருநாள் போட்டி (329, 24), 54 'டி-20' போட்டியில் (193, 48) பங்கேற்றுள்ளார்.

சமீபத்திய பிரிமியர் தொடரில் குஜராத் அணிக்கு துவக்க பேட்டராக அசத்திய சுதர்சன். 759 ரன் (15 போட்டி) குவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் அறிமுகமாக காத்திருக்கிறார்.

மனதில் ஊக்கம்: சுதர்சன், 23, கூறுகையில்,''ஜூனியர் அளவில் வாஷிங்டனுக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடியது 'ஸ்பெஷல்' அனுபவம். இவரை முன்னுதாரணமாக கொண்டு செயல்படுகிறேன். ஆரம்பத்தில் பிரிமியர் தொடரில் அசத்தினார். பின் இந்திய அணியில் இளம் வயதில் வாய்ப்பு பெற்றார். சென்னையை சேர்ந்த ஒருவர் இந்திய அணிக்காக விளையாடுகிறார் என்ற விஷயம், எனக்கு ஊக்கம் அளித்தது. இவரது வழியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது,''என்றார்.

வாஷிங்டன் கூறுகையில்,''கிரிக்கெட்டில் சுதர்சன் வளர்ச்சி பற்றி எனது பயிற்சியாளர்கள், நண்பர்கள் அடிக்கடி பேசுவர். 'டிவி'யில் அவரது ஆட்டத்தை பார்க்கும் போது சில விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். வளரும் வீரர்களுக்கு ஊக்க சக்தியாக உள்ளார்,''என்றார்.

இரட்டை 'சுழல்'

இந்திய முன்னாள் 'ஸ்பின்னர்' ஹர்பஜன் சிங் கூறுகையில்,''லீட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இந்திய 'லெவனில்' குல்தீப், ஜடேஜா என இரு 'ஸ்பின்னர்கள்' இடம் பெறுவது நல்லது. 2002ல் நடந்த ஹெடிங்லி டெஸ்டில் நானும் கும்ளேவும் சேர்ந்து 11 விக்கெட் வீழ்த்தினோம். 3 'வேகங்களுக்கு' வாய்ப்பு அளிக்கலாம். பயிற்சியில் சதம் அடித்த ஷர்துல் தாகூர் இடம் பெறலாம்,''என்றார்.



வருகிறார் காம்பிர்

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் காம்பிரின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட, அவசரமாக டில்லி திரும்பினார். தற்போது தாயாரின் உடல்நிலை சீராக உள்ளது. இதனால், இன்று மீண்டும் லண்டன் புறப்படுகிறார். லீட்ஸ் டெஸ்ட் (ஜூன் 20) போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைந்து கொள்வார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us