/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்துரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து
ரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து
ரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து
ரோகித் சர்மா, ஜடேஜா ஓய்வு: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து
ADDED : ஜூன் 30, 2024 11:39 PM

பார்படாஸ்: சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து இந்தியாவின் ரோகித், ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றனர்.
கோலியை தொடர்ந்து சர்வதேச 'டி-20' அரங்கில் கேப்டன் ரோகித் சர்மா 37, ரவிந்திர ஜடேஜா 35, ஓய்வை அறிவித்தனர். 159 சர்வதேச 'டி-20' போட்டியில் 5 சதம், 32 அரைசதம் உட்பட 4231 ரன் எடுத்துள்ளார் ரோகித். சர்வதேச 'டி-20' அரங்கில் 62 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித், 49 வெற்றி, 12 தோல்வியை பெற்றுத்தந்தார். ஒரு போட்டி 'டை' ஆனது. 'டி-20' உலக கோப்பையில் இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி 14 போட்டியில், 12 வெற்றி, 2 தோல்வியை பெற்றது.
இதுகுறித்து ரோகித் கூறுகையில், ''சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இது தான் சரியான நேரமாக கருதுகிறேன்,'' என்றார்.
ரவிந்திர ஜடேஜா, 74 சர்வதேச 'டி-20' போட்டியில் (515 ரன், 54 விக்கெட்) பங்கேற்றுள்ளார். இவர் கூறுகையில், ''இதயம் நிறைந்த நன்றியுடன் சர்வதேச 'டி-20' போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன். 'டி-20' உலக கோப்பை வென்றதன்மூலம் எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பேன்,'' என்றார்.
மெஸ்சி, ஜோகோவிச் வழியில்...
'டி-20' உலக கோப்பை பைனலில் வெற்றி பெற்ற தருணத்தில் இந்திய கேப்டன் ரோகித், பார்படாஸ் மைதான ஆடுகளத்தின் மண்ணை எடுத்து சுவைத்தார். இது, செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் செயல்பாடு போல இருந்தது. இவர், விம்பிள்டன் பைனலில் வெற்றி பெற்ற போது மைதானத்தின் புற்களை சுவைத்தார். இருவரின் புகைப்படத்தை விம்பிள்டன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தது.
இதேபோல பரிசளிப்பு விழாவில் கேப்டன் ரோகித், அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியை போல நடந்து சென்று கோப்பையை பெற்றுக் கொண்டார். கத்தாரில் 2022ல் நடந்த உலக கோப்பை கால்பந்து பைனலில் வெற்றி பெற்ற போது மெஸ்சி, வித்தியாசமாக நடந்து சென்று கோப்பையை பெற்றுக் கொண்டார். இப்புகைப்படங்களை 'பிபா' தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது. பின் ரோகித், இந்திய மூவர்ணக் கொடியை மைதானத்தில் ஊன்றினார்.