ADDED : ஜூலை 20, 2024 11:14 PM

மும்பை: சென்னை அணிக்கு மாற ரிஷாப் பன்ட் திட்டமிட்டுள்ளார்.
ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் 'மெகா' ஏலம் வரும் டிசம்பர், 2025, பிப்ரவரியில் நடக்க உள்ளன. இதில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். டில்லி நிர்வாகத்துடன் கேப்டன் ரிஷாப் பன்ட் நல்லுறவில் இல்லை. இவரை தக்க வைப்பது பற்றி பரிசீலித்து வருகின்றனர். இவர், சென்னை அணிக்கு மாற ஆர்வமாக உள்ளார்.
சென்னை அணிக்காக வரும் சீசனில் தோனி விளையாடுவாரா அல்லது ஓய்வு அறிவிப்பாரா என்பது ரகசியமாக உள்ளது. தோனியின் விக்கெட்கீப்பர்/பேட்டர் இடத்தை ரிஷாப் பன்ட் பிடிக்கலாம். ருதுராஜிற்கு பதில் சென்னை அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம்.
லக்னோ அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக லோகேஷ் ராகுலும் வேறு அணிக்கு செல்லலாம். இவரை, பெங்களூரு அணி வரவேற்கிறது. டுபிளசிக்கு மாற்றாக கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படலாம். இதே போல மும்பை அணியில் இருந்து ரோகித் சர்மா, சூர்யகுமார் வெளியற வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு கோல்கட்டா அணி வலை விரித்துள்ளது.