/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/எம்.பி.,யை கரம் பிடிக்கும் ரிங்கு சிங் எம்.பி.,யை கரம் பிடிக்கும் ரிங்கு சிங்
எம்.பி.,யை கரம் பிடிக்கும் ரிங்கு சிங்
எம்.பி.,யை கரம் பிடிக்கும் ரிங்கு சிங்
எம்.பி.,யை கரம் பிடிக்கும் ரிங்கு சிங்

லக்னோ: ரிங்கு சிங் -பிரியா திருமணம் வரும் நவ.18ல் நடக்க உள்ளது.
இந்திய அணியின் அதிரடி பேட்டர் ரிங்கு சிங் (உ.பி.,). இவரது தந்தை கன்சந்திரா சிங், வீடுகளுக்கு காஸ் டெலிவரி செய்து வந்தார். தனது கிரிக்கெட் திறமையால் குடும்பத்தின் நிலையை உயர்த்தினார் ரிங்கு.
தொடர்ந்து 5 சிக்சர்: கடந்த 2018ல் பிரிமியர் தொடர் ஏலத்தில் இவரை கோல்கட்டா அணி ரூ. 80 லட்சத்திற்கு வாங்கியது. 2022ல் ரூ. 55 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. 2023ல் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கோல்கட்டா வெற்றிக்கு கடைசி ஓவரில் 29 ரன் தேவைப்பட்டன. யாஷ் தயாள் ஓவரில் வரிசையாக 5 சிக்சர் விளாசிய ரிங்கு சிங், நம்ப முடியாத வெற்றியை தேடித் தந்தார். இதையடுத்து இந்திய அணியில் வாய்ப்பு தேடி வந்தது. 33 சர்வதேச 'டி-20' போட்டி (546 ரன்), 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2025ல் ரூ. 13 கோடிக்கு ரிங்கு சிங்கை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொண்டது.
வக்கீல் டூ எம்.பி.,: வரும் ஜூன் 8ல் ரிங்கு சிங் 27, -சமாஜ்வாதி கட்சி எம்.பி.,யான பிரியா 26, திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. நவ.18ல் வாரணாசியில் திருமணம் நடக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வக்கீலாக இருந்தார் பிரியா. பின் தந்தை வழியில் அரசியலில் குதித்தார். 2024ல் உ.பி.,யின் மச்லிஷார் லோக்சபா தொகுதியில் வென்று, எம்.பி., ஆனார்.
சமாஜ்வாதி கட்சி சார்பில் இரு முறை எம்.பி.,யாக இருந்தவர் பிரியாவின் தந்தை டூபானி சரோஜ். தற்போது எம்.எல்.ஏ.,வாக உள்ளார். டூபானி கூறுகையில்,''கடந்த சில மாதங்களாக ரிங்கு, பிரியா பழகி வந்தனர். இரு குடும்பத்தினரின் ஆசிர்வாதத்துடன் இவர்களது திருமணம் நடக்க உள்ளது,''என்றார்.