ADDED : ஜன 29, 2024 06:53 PM

கோவை: சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக அணி இன்னிங்ஸ், 293 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய
கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை 89வது சீசன்
நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல்
கல்லுாரி மைதானத்தில் நடந்த 'சி' பிரிவு நான்காம் சுற்று லீக் போட்டியில்
தமிழகம், சண்டிகர் அணிகள் மோதின.முதல் இன்னிங்சில் சண்டிகர்
111, தமிழகம் 610/4 ('டிக்ளேர்') ரன் எடுத்தன. இரண்டாம் நாள் முடிவில்
சண்டிகர் அணி 2வது இன்னிங்சில் 1/0 ரன் எடுத்திருந்தது.
மூன்றாம்
நாள் ஆட்டத்தில் சண்டிகர் அணிக்கு சாய் கிஷோர் தொல்லை தந்தார். இவரது
'சுழலில்' அர்ஸ்லான் கான் (9), ஹர்னுார் சிங் (21), குணால் மகாஜன் (17)
சிக்கினர். மயங்க் சித்து (38) 'ரன்-அவுட்' ஆனார். கேப்டன் மனன் வோரா
(16), ராஜ் பாவா (5) நிலைக்கவில்லை. குரிந்தர் சிங் (35) ஆறுதல் தந்தார்.
அன்கித் கவுசிக் அரைசதம் விளாசினார். அர்பித் (1), முருகன் அஷ்வின் (8),
ஹர்தேஜஸ்வி கபூர் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.
சண்டிகர் அணி
2வது இன்னிங்சில் 206 ரன்னுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. கவுசிக் (50)
அவுட்டாகாமல் இருந்தார். தமிழகம் சார்பில் சாய் கிஷோர் 5, அஜித் ராம் 3
விக்கெட் சாய்த்தனர். ஆட்ட நாயகன் விருதை தமிழகத்தின் ஜெகதீசன் வென்றார்.
தமிழக அணிக்கு 7 புள்ளி வழங்கப்பட்டது. 'சி' பிரிவில் தமிழக அணி (15
புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது.