ADDED : ஜூலை 14, 2024 12:12 AM

லண்டன்: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மார்க் உட் தேர்வானார்.
இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ், 114 ரன்னில் வெற்றி பெற்றது. இப்போட்டியுடன் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 41, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இரண்டாவது டெஸ்ட் ஜூலை 18ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆண்டர்சனுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட் 34, சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை 34 டெஸ்டில் (108 விக்கெட்) விளையாடிய மார்க் உட், கடைசியாக தர்மசாலாவில் நடந்த (2024, மார்ச் 7-9) இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்றார்.
'லெவன்' அணிக்கு மார்க் உட் தேர்வு செய்யப்படும் பட்சத்தில், முதல் டெஸ்டில் 12 விக்கெட் சாய்த்து ஆட்ட நாயகன் விருது வென்ற அட்கின்சனுடன் இணைந்து பந்துவீசலாம்.