/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கேதர் ஜாதவ் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...கேதர் ஜாதவ் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...
கேதர் ஜாதவ் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...
கேதர் ஜாதவ் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...
கேதர் ஜாதவ் 'குட்-பை' * கிரிக்கெட்டில் இருந்து...
ADDED : ஜூன் 03, 2024 11:16 PM

புதுடில்லி: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் கேதர் ஜாதவ்.
இந்திய கிரிக்கெட் 'ஆல் ரவுண்டர்' கேதர் ஜாதவ் 39. மகாராஷ்டிராவை சேர்ந்தவர். 2014ல் இலங்கைக்கு எதிராக ராஞ்சி ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். மொத்தம் 73 போட்டியில் 1389 ரன், 27 விக்கெட் சாய்த்தார். 9 'டி-20' போட்டியில் 122 ரன் எடுத்தார். 2019ல் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஐ.பி.எல்., தொடரில் டில்லி (2010, 2013-15), கொச்சி (2011), பெங்களூரு (2016-17, 2023), ஐதராபாத் (2021) அணிகளுக்காக விளையாடிய கேதர் ஜாதவ், 2018-2020ல் சென்னை அணியில் விளையாடியுள்ளார். 2018 தொடர் முதல் போட்டி, கடைசி ஓவரில் காயத்துடன் களமிறங்கிய இவர், அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். மொத்தம் 93 ஐ.பி.எல்., போட்டியில் 1196 ரன் எடுத்தார்.
தவிர 87 முதல் தர போட்டியில் 17 சதம் உட்பட 6100 ரன் எடுத்துள்ளார். 2023-24 ரஞ்சி கோப்பை தொடரில் புனே அணிக்கு எதிராக 182 ரன் விளாசினார். சர்வதேச அரங்கில் கடைசியாக 2020ல் நியூசிலாந்துக்கு எதிராக (ஆக்லாந்து) ஒருநாள் போட்டியில் விளையாடினார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தியில்,' எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அன்பு, ஆதரவை வழங்கிய அனைவருக்கும் நன்றி. அனைத்துவித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்,'' என்றார்.