/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கருண் நாயர் கலக்கல் சதம்: இந்தியா 'ஏ' அணி ரன் குவிப்புகருண் நாயர் கலக்கல் சதம்: இந்தியா 'ஏ' அணி ரன் குவிப்பு
கருண் நாயர் கலக்கல் சதம்: இந்தியா 'ஏ' அணி ரன் குவிப்பு
கருண் நாயர் கலக்கல் சதம்: இந்தியா 'ஏ' அணி ரன் குவிப்பு
கருண் நாயர் கலக்கல் சதம்: இந்தியா 'ஏ' அணி ரன் குவிப்பு
ADDED : மே 31, 2025 12:21 AM

கேன்டர்பரி: முதல் டெஸ்டில் இந்தியா 'ஏ' அணியின் கருண் நாயர் சதம் கடந்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் கேன்டர்பரியில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி 'பவுலிங்' தேர்வு செய்தது.
இந்தியா 'ஏ' அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் (2), ஜெய்ஸ்வால் (24) நிலைக்கவில்லை. பின் இணைந்த கருண் நாயர், சர்பராஸ் கான் ஜோடி நம்பிக்கை தந்தது. ரெஹான் அகமது பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சர்பராஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அசத்திய சர்பராஸ்,ஜமான் அக்தர் வீசிய 48வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டினார்.மூன்றாவது விக்கெட்டுக்கு 181 ரன் சேர்த்த போது ஜோஷ் ஹல் பந்தில் சர்பராஸ் (92) அவுட்டானார். நிதானமாக ஆடிய கருண், 155 பந்தில் சதம் கடந்தார். ஹைன்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய துருவ் ஜுரெல், தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார்.
ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 409 ரன் எடுத்திருந்தது. கருண் (186), ஜுரெல் (82) அவுட்டாகாமல் இருந்தனர்.