Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/பாண்டிங்கை முந்தினார் ஜோ ரூட்

பாண்டிங்கை முந்தினார் ஜோ ரூட்

பாண்டிங்கை முந்தினார் ஜோ ரூட்


UPDATED : ஜூலை 25, 2025 11:38 PM

ADDED : ஜூலை 25, 2025 11:30 PM

Follow on Google

UPDATED : ஜூலை 25, 2025 11:38 PM ADDED : ஜூலை 25, 2025 11:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இரண்டாவது இடம்



ஜோ ரூட், 120வது ரன்னை எட்டிய போது, டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். பாண்டிங்கை முந்தினார்.

இப்பட்டியலில் 'டாப்-5' வீரர்கள்



38வது சதம்

டெஸ்டில் அதிக சதம் அடித்தவர்களில் நான்காவது இடத்தை சங்ககராவுடன் (இலங்கை) பகிர்ந்து கொண்டார் ரூட். இருவரும் தலா 38 சதம் அடித்துள்ளனர். முதல் மூன்று இடங்களில் சச்சின் (51), காலிஸ் (45), பாண்டிங் (41) உள்ளனர்.

* இங்கிலாந்து மண்ணில் மட்டும் 23வது சதம் எட்டினார் ரூட். சொந்த மண்ணில் அதிக சதம் (தலா 23) விளாசிய வீரர்களில் முதலிடத்தை பாண்டிங் (ஆஸி.,), ஜெயவர்தனா (இலங்கை), காலிஸ் (தெ.ஆப்.,) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார் ரூட்.

இரண்டாவது இடம்

டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 12வது சதம் அடித்தார் ரூட். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்தை ஹாப்ஸ் (இங்கி., 12, எதிர், ஆஸி.,), ஸ்மித் (ஆஸி., 12, எதிர், இங்கி.,) பகிர்ந்து கொண்டார். முதல் இரு இடங்களில் பிராட்மேன் (ஆஸி., 19, எதிர், இங்கி.,), கவாஸ்கர் (இந்தியா, 13, எதிர், வெ.இண்டீஸ்) உள்ளனர்.

* டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக அதிக சதம் அடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி., 11) சாதனையை ரூட் (12) தகர்த்தார்.

* டெஸ்டில் ஒரு அணிக்கு எதிராக சொந்த மண்ணில் அதிக சதம் அடித்தவரானார் ரூட் (9 சதம், எதிர், இந்தியா). ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் (8 சதம், எதிர், இங்கி., )சாதனையை தகர்த்தார்.

1000 ரன்

மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில், டெஸ்டில் 1000 ரன் எட்டிய முதல் வீரரானார் ஜோ ரூட். ஏற்கனவே லார்ட்சில் 2166 ரன் எடுத்துள்ளார். இரு மைதானங்களில் 1000+ ரன் எடுத்த 3வது இங்கிலாந்து பேட்டர் ஆனார். முதல் இரு இடங்களில் குக், கூச் உள்ளனர். இருவரும் லார்ட்ஸ், ஓவல் மைதானங்களில் அசத்தியுள்ளனர்.

* டெஸ்ட் அரங்கில் அதிக முறை 50+ ஸ்கோர் எடுத்தவரில் பாண்டிங் (ஆஸி., 103), காலிசை (தெ.ஆ., 103) முந்திய ரூட் (104) 2வது இடம் பிடித்தார். முதலிடத்தில் இந்தியாவின் சச்சின் (119) உள்ளார்.

2021ல் இருந்து

டெஸ்டில் 2021ல் இருந்து அதிக சதம் அடித்த பேட்டர்களின் ஜோ ரூட் (21) முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி., 10), வில்லியம்சன் (நியூசி., 10) உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap