Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆறுதல் தருமா சென்னை * ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஆறுதல் தருமா சென்னை * ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஆறுதல் தருமா சென்னை * ராஜஸ்தானுடன் இன்று மோதல்

ஆறுதல் தருமா சென்னை * ராஜஸ்தானுடன் இன்று மோதல்

Latest Tamil News
புதுடில்லி: பிரிமியர் தொடரில் சென்னை அணி. 9 போட்டியில் தோற்றதால், 'பிளே-ஆப்' வாய்ப்பை இழந்தது. இன்று டில்லியில் நடக்கும் முக்கியத்துவம் இல்லாத லீக் போட்டியில் ராஜஸ்தானை சந்திக்கிறது. இதில் வென்றால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பெறுவதை தவிர்க்கலாம்.

கேப்டன் ருதுராஜ் காயத்தால் விலகியது, வெளிநாட்டு வீரர்கள் கான்வே, ரச்சின், பதிரான என ஒருவரும் கைகொடுக்காதது. தீபக் ஹூடா, திரிபாதி என சர்வதேச அனுபவம் பெற்ற வீரர்களும் நெருக்கடியில் அணியை கைவிடுவது பலவீனம்.

கேப்டனாக தோனி வந்ததும் அணியை கரை சேர்க்க முடியவில்லை. சீனியர் வீரர்களால் நிரம்பிய சென்னை அணி, இப்போது இளமைக்கு திரும்பியுள்ளது. ஆயுஷ் மாத்ரே, ரஷீத், உர்வில் படேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் திறமை நிரூபிப்பது, அடுத்த சீசனுக்கான அணியை தயார் செய்ய உதவும். பிரவிஸ், ஷிவம் துபே நம்பிக்கை தருகின்றனர். சாம் கர்ரான் நாடு திரும்பியது சிக்கல் தரலாம். பவுலிங்கில் கலீல் அகமது உதவுகிறார்.

ராஜஸ்தான் அணியும் (13ல் 3 வெற்றி, 10 தோல்வி) 'பிளே-ஆப்' வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது. துவக்கத்தில் ஜெய்ஸ்வால், வைபவ் ஜோடி, தவிர, 'மிடில் ஆர்டரில்' கேப்டன் சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், ஹசரங்கா தடுமாறுவது பலவீனம். சர்வதேச அனுபவம் வாய்ந்த பவுலர்கள் இல்லாதது அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது. ஆர்ச்சர் நாடு திரும்பியது ஏமாற்றம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us