/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' *இன்று இலங்கையுடன் கடைசி மோதல்இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' *இன்று இலங்கையுடன் கடைசி மோதல்
இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' *இன்று இலங்கையுடன் கடைசி மோதல்
இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' *இன்று இலங்கையுடன் கடைசி மோதல்
இந்தியாவுக்கு கிடைக்குமா 'ஹாட்ரிக்' *இன்று இலங்கையுடன் கடைசி மோதல்
ADDED : ஜூலை 29, 2024 11:10 PM

பல்லேகெலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது 'டி-20' போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா அசத்தும் பட்சத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெறலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டி 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி இன்று பல்லேகெலேயில் நடக்கிறது.
புதிய துவக்கம்
இந்திய அணிக்கு துவக்க வீரர் ஜெய்ஸ்வால், முதல் இரு போட்டியில் 70 ரன் விளாசினார். இவரது சிறப்பான ஆட்டம் தொடரலாம். சுப்மன் கில் கழுத்துவலி காரணமாக இன்றும் களமிறங்குவது உறுதியில்லாமல் உள்ளது.
இவரது இடத்தில் களமிறங்கிய சஞ்சு சாம்சன், ஒரே பந்தில் போல்டானது சோகம். இன்று மீண்டு வர முயற்சிக்கலாம். புதிய கேப்டன் சூர்யகுமார், திட்டங்களை சரியாக செயல்படுத்துகிறார். இரு போட்டியில் 58, 26 ரன் எடுத்து, மற்ற வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். ரிஷாப் பன்ட்டும் நம்பிக்கை தருகிறார். ரியான் பராக், ஹர்திக் பாண்ட்யா இன்னும் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.
பிஷ்னோய் பலமா
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சுழற்பந்து வீச்சாளர்கள் பிஷ்னோய், அக்சர் படேல் என மூவரும் தலா 4 விக்கெட் சாய்த்து அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
பேட்டிங் எப்படி
இலங்கை அணி முதல் இரு போட்டியிலும் பேட்டிங்கில் சிறப்பான துவக்கம் தந்தது. ஆனால் 30 ரன்னுக்கு 9, 31 ரன்னுக்கு 7 என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்து, போட்டியில் தோற்கிறது. இதில் இருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும். துவக்கத்தில் நிசங்கா (111 ரன்), பெரேரா (73) நன்கு திறமை வெளிப்படுத்துகின்றனர். அடுத்து வரும் குசல் மெண்டிஸ் (55), கமிந்து மெண்டிஸ் (38) விரைவில் அவுட்டாகின்றனர்.
பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர் பதிரானா (2 போட்டி, 5 விக்.,) நம்பிக்கை தருகிறார். சுழலில் ஹசரங்கா (2) ஆறுதல் தர, மற்ற பவுலர்கள் மதுஷங்கா (1), பெர்னாண்டோ (1), தீக்சனா (1) என யாரும் பெரியளவு விக்கெட் வீழ்த்தாதது ஏமாற்றம்.
21 வெற்றி
இந்தியா, இலங்கை அணிகள் 31 'டி-20' ல் மோதின. இதில் இந்தியா 21ல் வென்றது. 9ல் தோற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.