/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/சாதிப்பரா காம்பிர், சூர்யகுமார்... * இன்று இந்தியா- இலங்கை மோதல்சாதிப்பரா காம்பிர், சூர்யகுமார்... * இன்று இந்தியா- இலங்கை மோதல்
சாதிப்பரா காம்பிர், சூர்யகுமார்... * இன்று இந்தியா- இலங்கை மோதல்
சாதிப்பரா காம்பிர், சூர்யகுமார்... * இன்று இந்தியா- இலங்கை மோதல்
சாதிப்பரா காம்பிர், சூர்யகுமார்... * இன்று இந்தியா- இலங்கை மோதல்
ADDED : ஜூலை 26, 2024 11:28 PM

பல்லேகெலே: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 'டி-20' தொடர் இன்று துவங்குகிறது. புதிய கேப்டன் சூர்யகுமார் தலைமையில் 'உலக சாம்பியன்' இந்திய அணியின் வெற்றி நடை தொடரலாம்.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று பல்லேகெலே மைதானத்தில் நடக்கவுள்ளது. ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஓய்வு பெற்றதால், திடீர் திருப்பமாக புதிய கேப்டன் சூர்யகுமார், புதிய பயிற்சியாளர் காம்பிர் தலைமையில் இந்திய 'டி-20' அணி களமிறங்கியுள்ளது.
அடுத்த 'டி-20' உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக புதிய அணியை கட்டமைக்கும் வகையில் இளம் வீரர்கள் அதிகம் இடம் பெற உள்ளனர். ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக கலக்கிய சுப்மன் கில், இம்முறை துணைக் கேப்டனாகி, துவக்க வீரராக தனது இடத்தை உறுதி செய்து கொள்ளலாம். இவருடன் ஜெய்ஸ்வால் களமிறங்க உள்ளார்.
'மிடில் ஆர்டரில்' சூர்யகுமார் களமிறங்க, ரிங்கு சிங், ரியான் பராக் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்திய அணி கேப்டன் கனவில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, பின் வரிசையில் 'பினிஷிங்கிற்கு' கைகொடுக்கலாம். தவிர, அக்சர் படேல், ஷிவம் துபே என 'ஆல் ரவுண்டர்கள்' உள்ளதும் கூடுதல் பலம். தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், தனது சிறப்பான ஆட்டத்தை தொடர காத்திருக்கிறார்.
வேகப்பந்து வீச்சில் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளதால், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் பொறுப்பாக செயல்பட வேண்டும்.
காயம் சோகம்
இலங்கை அணி சமீபத்திய உலக கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் அணியை பலமாக கட்டமைக்கும் வகையில், தற்காலிக பயிற்சியாளர் ஜெயசூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அனுபவ துஷ்மந்தா சமீரா (மூச்சுக்குழல் அழற்சி), துஷாரா (எலும்பு முறிவு) வெளியேறியது சிக்கல் தந்துள்ளது.
புதிய கேப்டன் சரித் அசலங்காவுடன், 'சீனியர்' சண்டிமால், குசல் மெண்டிஸ் அணிக்கு திரும்பியுள்ளது பலம் சேர்க்கும். தவிர குசல் பெரேரா, ஹசரங்கா, ஷானகா, பதிரானா, தீக் சனா இந்திய அணிக்கு தொல்லை கொடுக்க முயற்சிக்கலாம்.
யார் ஆதிக்கம்
இந்தியா, இலங்கை அணிகள் 29 'டி-20' ல் மோதின. இதில் இந்தியா 19ல் வென்றது. 9ல் தோற்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.